• தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு உதயம்

    தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டம்.

               தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டம் 23.10.2017 அன்று தோழர். அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலர் தோழர். N. குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். 

         தர்மபுரி AIBDPA மாவட்ட அமைப்பை துவக்கி வைத்து மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார். BSNLEU தர்மபுரி மாவட்டச் செயலர் தோழர். கிருஷ்ணன், கிளைச்செயலர் தோழர். P. செல்லமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

               கூட்ட முடிவில் தர்மபுரி AIBDPA மாவட்ட அமைப்பு மாநாட்டை 2017 டிசம்பர் இறுதிக்குள் நடத்துவதென்றும் அதற்கான கன்வீனராக தோழர். அழகிரிசாமி, தர்மபுரி பகுதிக்கு தோழர். டேவிட்டும், ஹரூர் பகுதிக்கு தோழர். செல்வராஜும் கன்வீனர்களாக இருந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

                 தர்மபுரியில் AIBDPA மாவட்ட அமைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திய தர்மபுரி தோழர்களுக்கு சபாஷ் சொல்லி பாராட்டுகிறது தமிழ் மாநிலச்சங்கம்.