• வெட்ரன் தலைவர் தோழர். R.K. ஹோலி மறைவு

  தோழர். R.K.ஹோலி மறைவு.

     AIBDPA ஆயுட்கால உறுப்பினரும், தொலைத்தொடர்பு தொழிற்சங்க வெட்ரன் தலைவர்களில் ஒருவருமான தோழர். R.K.ஹோலி அவர்கள் 26.11.2017 அன்று டெல்லியில் வைத்து காலமானார்.  AITTEEU CL-III தொழிற்சங்கத்தில் நீண்டகாலமாக பொருளாளராகவும் இருந்த தோழர். R.K.ஹோலியின் மறைவுச் செய்தி கேட்டு வருந்துகிறோம். அவர்தம் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைதெரிவிக்கின்றோம்.

  [Read More…]

 • வெற்றிகரமாய் நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

  மாநிலம் முழுவதும் ஓய்வூதியர்கள் உற்சாகமாய் கலந்துகொண்ட   மனிதச் சங்கிலி போராட்டம்.

       BSNLல் உள்ள UNIONS &ASSNS OF BSNL அறைகூவலின்படி  மாநிலம் முழுவதும்  நடைபெற்ற  மனிதச் சங்கிலி போராட்டத்தில் உற்சாகமாய் கலந்துகொண்ட ஓய்வூதியர்கள் அனைவரையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

  சென்னை CGM அலுவலகம் :-

  ஈரோடு மாவட்டம் :-

  தூத்துக்குடி மாவட்டம் :-

  நெல்லை மாவட்டம் :-

  கடலூர் மாவட்டம் :-

  புதுச்சேரி மாவட்டம் :-

  சேலம் மாவட்டம் :-

  விருதுநகர் மாவட்டம் :-

 • தொழிலாளிவர்க்கச்சூரியன் தோழர்.சுகுமால் சென் Ex.MP மறைவு

  கொடி தாழ்த்தி அஞ்சலி செய்வோம்   தோழர்.சுகுமால் சென் Ex.MP மறைவுக்கு

   

    இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர். சுகுமால் சென் (22.11.2017) மறைவு செய்தியை மிகுந்த வேதனையோடு பகிர்ந்து கொள்கிறோம்.
  சிஐடியூ-வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். நிர்வாகியாக நீண்ட நாள் செயல் பட்ட தோழர். WFTU-ன் இணைந்த Trade Unions International of Public and Allied Services- பொதுச்செயலாளர். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளத்தின் தலைவர்/பொதுச்செயலாளர் போன்ற பொறுப்புகளை திறம்பட செய்தவர். மத்திய அரசு ஊழியர்  இயக்கங்களோடு நீண்ட தொடர்பில் பணி செய்த தோழர்.1982 முதல் 1994 வரை பாராளுமன்ற ராஜ்ஜிய சபை உறுப்பினர்.

         “இந்திய தொழிற்சங்க இயக்க வரலாறு” மற்றும் “சர்வதேச தொழிற்சங்க இயக்க வரலாறு”- ஆகிய இரு புத்தகங்களை மிகுந்த ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

        தோழரின் மறைவிற்கு கொடி தாழ்த்தி அஞ்சலி தெலுத்துவதோடு   அவர்தம் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

 • தார்மீக ஆதரவளிப்போம் ! 23-11-2017 மனிதச்சங்கிலி போராட்டம்.

  All Unions and Associations of BSNL புதிய கூட்டமைப்பு ஒன்றுபட்டு 23.11.2017ல் நடத்தும் மனிதச்சங்கிலி   போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு !

                23-11-2017ல் கார்போரேட் அலுவலகம், மாநில, மாவட்ட அலுவலகம் முன்பும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும்  மனிதச்சங்கிலி போராட்டத்தில் நமது சங்கமும் தார்மீக ஆதரவளித்து கலந்து கொள்ள மத்திய, மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதால் அனைத்து மாவட்டச்செயலர்களும் உரிய கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமென மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

  கோரிக்கைகள்:-

  # 01.01.2017 முதல் ஊதிய மாற்றம்.

  # துணை டவர் கம்பேனி அமைக்கும் திட்டத்தை கைவிடு !!

 • தமிழகமெங்கும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்புதின ஆர்ப்பாட்டம்.

     தமிழகமெங்கும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்புதின ஆர்ப்பாட்டம்.

   அனைத்து மாவட்டச் செயலர்களும் சிறப்பாக நடத்திய கவன ஈர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், தொலைத்தொடர்பு துறை அமைச்சருக்கும், DOT செயலருக்கும், CMDக்கும் ஈமெயில் அனுப்பிய மாவட்டச் செயலர்களையும்  மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

  சென்னை மாவட்டம்:-

       AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 மதியம் சென்னையில் தொலைத்தொடர்பு தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர். T. கோதண்டம் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி AIBDPA மாநிலச்  செயலாளர் தோழர்.  C. K. நரசிம்மன் பேசினார். BSNLEU மாநிலச்  செயலாளர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், BSNLEU மாநில உதவிச்  செயலாளர் தோழர்.M. முருகையா, BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். ராமலிங்கம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப்   பேசினார்கள். மாவட்ட பொருளர் தோழர். N. சாயிராம்  ஆர்ப்பாட்டத்தை  நன்றிகூறி முடித்து வைத்தார்.  

  நெல்லை மாவட்டம்:-

  AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 மதியம் 0100 மணியளவில் நெல்லை தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் D.கோபாலன் பேசினார். மாநில துணை தலைவர் தோழர். தாமஸ், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். N.சூசை மரிய அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தோழர். V.சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மாவட்ட உதவி செயலாளர் தோழர். M. முத்தையா நன்றி கூறினார். தோழியர்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

  ஈரோடு மாவட்டம் :-

          AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 காலையில் ஈரோட்டில் தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர்.A. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநில துணை செயலாளர் தோழர். N.குப்புசாமி, மாவட்ட செயலாளர் தோழர். P.சின்னசாமி பேசினார்கள். மாவட்ட பொருளர் தோழர். அய்யாசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர். V. மணியன் BSNLEU COS வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொறுப்பு செயலாளர் தோழர். R. குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார். 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

  தூத்துக்குடி மாவட்டம் :-

  AIBDPA மத்தியச்  சங்கத்தின் அறைகூவலுக்கி ணங்க தூத்துக்குடி  AIBDPA மாவட்டச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு 20.11.2017 காலை 1130 மணிக்கு “கவன ஈர்ப்பு தின ” ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர். T.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பேசினார்.

  கும்பக்கோண மாவட்டம் :-

  கோவை மாவட்டம் :-

     AIBDPA மத்தியச்  சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க கோவை AIBDPA மாவட்டச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு 20.11.2017 காலை 0100மணிக்கு “கவன ஈர்ப்பு தின ” ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர். L. உமாபதி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P.B. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் தோழர். G.பங்கஜவல்லி, தோழர். லியோ பிரான்ஸிஸ் ஜோசப் மற்றும் BSNLEU  Dist secy தோழர். C. ராஜேந்திரன் உட்பட பலர்  பேசினார். 80க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தை தோழர். நன்றிகூறி நிறைவு செய்தார்.

  [Read More…]

 • வெற்றிபெறச் செய்வோம் ! 2017 நவம்பர் 20 கவன ஈர்ப்பு தின போராட்டத்தை –

  மத்தியச்சங்க அறைகூவலான கவன ஈர்ப்பு தினப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்  !

          மத்தியச் சங்க அறைகூவலின்படி 20.11.2017 அன்று கீழ்க்கண்ட கோரிக்கைகளை விளக்கி கவன ஈர்ப்பு தின போராட்டம் நடத்தவும் அதற்காக ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர், DOT செயலர், தலைமை நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு ஈமெயில்/ பேக்ஸ் அனுப்பிட மத்திய, மாநிலச்சங்கம் கோருகிறது.  

  கோரிக்கைகள்:-

  1) 01.01.2017 முதல் ஓய்வூதிய உயர்வு  வழங்கிடு !

  2) நிலைத்த மருத்துவப்படியாக பிரதி மாதம் ரூபாய் 2000/- வழங்கிடு !!

  3) 12.05.2017 உத்தரவின்படி ஓய்வூதிய உயர்வில் ஆப்ஷன் (விருப்பம்) 3 வழங்கிய DOT ஓய்வூதியர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகை வழங்கிடு !!!

  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்ட போராட்டங்களை நடத்திட முடிவு செய்யப்படடுள்ளது.

  போராட்ட நாள்:-

  ## 2017 நவம்பர் 20 கவன ஈர்ப்பு தினம் – அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் கீழே கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை

  (1) திரு. மனோஜ் சின்ஹா, தொலைத்தொடர்பு இலாகா  அமைச்சர்,

  (2)ஸ்ரீமதி. அருணா  சுந்தரராஜன், DOT செயலர்,

  (3)ஸ்ரீ அனுபம் ஸ்ரீவத்சவா, தலைமை நிர்வாக இயக்குனர்  , BSNL

  ஆகியோருக்கு தொலைஅஞ்சல் / மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். – அதற்கான ஆங்கிலக் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  MATTER FOR FAX/ EMAIL

  To

  Shri. Manoj Sinha, Hon’ble Minister for Communications (email address; mosc-office@gov.in) / Smt. Aruna Sunderarajan, Secretary, Department of Telecommunications.(email address; secy-dot@nic.in ) / CMD BSNL (email address; cmdbsnl@bsnl.co.in)

  Respected Sir/ Madam

  Immediate intervention sought to

  (1)Revise the pension of all BSNL retirees with 15% fitment on IDA pattern with effect from 01-01-2017 as affordability condition is not applicable for pensioners.

  (2) Grant a uniform Fixed Medical Allowance of Rs.2000 to BSNL retirees as in the case of EPF pensioners.

  (3) Immediate pension revision of DoT retirees on Option 3 as per order dated 12-05-2017 as the process is not even started in most of the circles even after 5 months of issue of orders.

  Thanking you,

  Yours faithfully

  ………..Secretary,

  All India BSNL DOT Pensioners Association

 • தேதிகள் மாற்றம் – மனித சங்கிலி போராட்டம், MPகளிடம் மனு அளிப்பு

  போராட்ட   தேதிகள் மாற்றம் –

  மனித சங்கிலி போராட்டம் – 23.11.2017,

  MPகளிடம் மனு அளிப்பு – 30.11.2017.

           14.11.2017ல் டெல்லியில் கூடிய BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, FNTO, SEWA BSNL, BSNL MS, AIBSNLOA, BSNL ATM, BSNL OA and BEA BSNL  சங்க பொதுச் செயலர்களின் கூட்டம் NFTEBSNL பொதுச்செயர் தோழர். சந்தேஷ்வர்சிங்  தலைமையில் நடைபெற்றது. போராட்டங்களை அனைவரிமும் கொண்டு செல்லும் விதமாக போராட்டதேதிகளை மாற்றிவைத்துள்ளதாகவும் அதனை முழுமையாக பயன்படுத்தி வலுவான போராட்டங்களை நடத்திட  அறைகூவல் விடப்பட்டது .

 • LIFE CERTIFICATE (உயிர் வாழ் சான்று) கொடுக்கப்பட்டதா ?

  LIFE CERTIFICATE (உயிர் வாழ் சான்று) கொடுக்கப்பட்டதா ?

          ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதத்திலும் ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெரும்  அஞ்சலகம் / வங்கிகளிலும்     LIFE CERTIFICATE (உயிர் வாழ் சான்று) வழங்கிடவேண்டும். மேலும் தரைவழி தொலைபேசி (LAND LINE) இணைப்பு வைத்திருக்கும் அனைத்து  ஓய்வூதியர்களும் LIFE CERTIFICATE (உயிர் வாழ் சான்று) வழங்கிடவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறோம் .

      இந்த ஆண்டு  LIFE CERTIFICATE (உயிர் வாழ் சான்று) கொடுக்காத தோழர்கள் உடனே கொடுக்கவும்.

 • மாபெரும் தார்ணா – டெல்லியில் – மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு

  டெல்லி செல்வோம் ! மக்கள் மேடையில் கலந்து கொள்ள !

  பாராளுமன்றம்நோக்கி   அணிதிரளும்பட்டாளிகளுடன் நாமும் கலந்து கொள்வோம் !

        2017 நவம்பர் 9,10,11-ஆகிய மூன்று தினங்கள் முற்றுகையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்க உள்ளனர்.

  கோரிக்கைகள்:-

  1)குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000/-
  2)அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்கு !   அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.3000/-பென்ஷன் !
  3)விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறை பாதுகாத்திடு !
  4)சங்கம் அமைக்க உரிமை வழங்கு / 45-நாட்களில் பதிவு.

  5)பொதுத்துறை பாதுகாப்பு. பிஎஸ்என்எல்,  வங்கி, ரயில்வே, காப்பீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் தனியார்மயம் கூடாது !

  6)தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களை கைவிடு !
  7)வேலைவாய்ப்புகளை பறிக்காதே/உருவாக்கு!
  8)போனஸ், பி.எப், ஈ.எஸ்.ஐ – போன்றவைகளுக்கு உச்ச வரம்பை நீக்கு!
  9)அங்கன்வாடி போன்ற திட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்/ “தொழிலாளர்களாக”(Workers) அங்கீகாரம் செய்!
  10)ஒப்பந்தம் / கான்ட்ராக்ட் முறை ஒழிப்பு. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கு !

  11)முறைசாரா தொழிலாளர்களை காப்பாற்ற தேசிய நிதியம். ஜிடிபி-ல் 3% நிதி ஒதுக்கீடு
  12)வகுப்புவாதம் எதிர்ப்பு; மக்கள் ஒற்றுமை ஆகிய 12 அம்ச கோரிக்கைகள் முன் வைத்து மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் மாபெரும் தார்ணா.

 • தூத்துக்குடி தோழர் R. டான் போஸ்கோ மறைவு

      தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தி பகுதியில் K.G.போஸ் அணியை வளர்த்த தலைவர்களில் ஒருவரும், BSNLEU & AIBDPA முன்னாள் மாவட்ட தலைவருமான தோழர் R. டான் போஸ்கோ (வயது 74) Head T/M தூடி அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறோம். அன்னாரின் பிரிவால் துயருரும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நமது இரங்கலை தெரிவிக்கின்றோம். அன்னாரின் நல்லடக்கம் நாளை (06.11.17 ) காலை 9 மணி அளவில் தூத்துக்குடியில் நடைபெறும் என்பதை தெரிவிக்கின்றோம்.