• ஓய்வூதிய உயர்வு வழங்கிடக்கோரி போராட்ட அறைகூவல் !

     25.10.2017ல் டெல்லியில் கூடிய மத்தியச்சங்க கூட்டத்தில் ஓய்வூதிய உயர்வு வழங்கிடக்கோரி போராட்ட அறைகூவல் !

           கடந்த 25.10.2017ல் டெல்லியில் நடைபெற்ற NCCPA தார்ணாவில் கலந்து கொண்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் BSNLலில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் புதிய ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் விவாதிக்கப்பட்டது. கோரிக்கைகளை முன்வைத்து மத்தியச் சங்கம் அதற்கான போராட்டத் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.

    கோரிக்கைகள்:-

    1) 01.01.2017 முதல் ஓய்வூதிய உயர்வு  வழங்கிடு !

    2) நிலைத்த மருத்துவப்படியாக பிரதி மாதம் ரூபாய் 2000/- வழங்கிடு !!

    3) 12.05.2017 உத்தரவின்படி ஓய்வூதிய உயர்வில் ஆப்ஷன் (விருப்பம்) 3 வழங்கிய DOT ஓய்வூதியர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகை வழங்கிடு !!!

    உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்ட போராட்டங்களை நடத்திட முடிவு செய்யப்படடுள்ளது.

    போராட்ட நாள்:-

    ## 2017 நவம்பர் 20 கவன ஈர்ப்பு தினம் – அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும் கீழே கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை

    (1) திரு. மனோஜ் சின்ஹா, தொலைத்தொடர்பு இலாகா  அமைச்சர்,

    (2)ஸ்ரீமதி. அருணா  சுந்தரராஜன், DOT செயலர்,

    (3)ஸ்ரீ அனுபம் ஸ்ரீவத்சவா, தலைமை பொது மேலாளர், BSNL

    ஆகியோருக்கு தொலைஅஞ்சல் / மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். – அதற்கான விளக்கக் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    MATTER FOR FAX/ EMAIL

    To

    Shri. Manoj Sinha, Hon’ble Minister for Communications (email address; mosc-office@gov.in) / Smt. Aruna Sunderarajan, Secretary, Department of Telecommunications.(email address; secy-dot@nic.in ) / CMD BSNL (email address; cmdbsnl@bsnl.co.in)

    Respected Sir/ Madam

    Immediate intervention sought to

    (1)Revise the pension of all BSNL retirees with 15% fitment on IDA pattern with effect from 01-01-2017 as affordability condition is not applicable for pensioners.

    (2) Grant a uniform Fixed Medical Allowance of Rs.2000 to BSNL retirees as in the case of EPF pensioners.

    (3) Immediate pension revision of DoT retirees on Option 3 as per order dated 12-05-2017 as the process is not even started in most of the circles even after 5 months of issue of orders.

    Thanking you,

    Yours faithfully

    ………..Secretary,

    All India BSNL DOT Pensioners Association

    ## 2017 டிசம்பர 11ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தார்ணா நடத்துவது.

    **** BSNL அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் 2வது கட்ட போராட்டமான 16-11-2017 ” மனித சங்கிலி போராட்டம்” – நமது தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்வது.

    மேலும் 2017 டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெரும் “வேலைநிறுத்த போராட்டத்தில் ” பங்களிப்பு உட்பட அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்குவது

    – என முடிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட மாவட்டச்செயலர்கள்  உரிய நடவடிக்கைகளை எடுத்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

        நமது பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ் 6மாத காலம் அமெரிக்கா செல்வதால் பொறுப்பு பொதுச் செயலராக தோழர். D. பாசு (கைபேசி எண் : 09433591382) செயல்படுவார் என அறிவிக்கப்படுகிறது.