• தமிழகமெங்கும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்புதின ஆர்ப்பாட்டம்.

     தமிழகமெங்கும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்புதின ஆர்ப்பாட்டம்.

   அனைத்து மாவட்டச் செயலர்களும் சிறப்பாக நடத்திய கவன ஈர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், தொலைத்தொடர்பு துறை அமைச்சருக்கும், DOT செயலருக்கும், CMDக்கும் ஈமெயில் அனுப்பிய மாவட்டச் செயலர்களையும்  மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

  சென்னை மாவட்டம்:-

       AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 மதியம் சென்னையில் தொலைத்தொடர்பு தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர். T. கோதண்டம் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி AIBDPA மாநிலச்  செயலாளர் தோழர்.  C. K. நரசிம்மன் பேசினார். BSNLEU மாநிலச்  செயலாளர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், BSNLEU மாநில உதவிச்  செயலாளர் தோழர்.M. முருகையா, BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். ராமலிங்கம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப்   பேசினார்கள். மாவட்ட பொருளர் தோழர். N. சாயிராம்  ஆர்ப்பாட்டத்தை  நன்றிகூறி முடித்து வைத்தார்.  

  நெல்லை மாவட்டம்:-

  AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 மதியம் 0100 மணியளவில் நெல்லை தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் D.கோபாலன் பேசினார். மாநில துணை தலைவர் தோழர். தாமஸ், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். N.சூசை மரிய அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தோழர். V.சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மாவட்ட உதவி செயலாளர் தோழர். M. முத்தையா நன்றி கூறினார். தோழியர்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

  ஈரோடு மாவட்டம் :-

          AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 20.11.17 காலையில் ஈரோட்டில் தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர்.A. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநில துணை செயலாளர் தோழர். N.குப்புசாமி, மாவட்ட செயலாளர் தோழர். P.சின்னசாமி பேசினார்கள். மாவட்ட பொருளர் தோழர். அய்யாசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர். V. மணியன் BSNLEU COS வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொறுப்பு செயலாளர் தோழர். R. குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார். 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

  தூத்துக்குடி மாவட்டம் :-

  AIBDPA மத்தியச்  சங்கத்தின் அறைகூவலுக்கி ணங்க தூத்துக்குடி  AIBDPA மாவட்டச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு 20.11.2017 காலை 1130 மணிக்கு “கவன ஈர்ப்பு தின ” ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர். T.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பேசினார்.

  கும்பக்கோண மாவட்டம் :-

  கோவை மாவட்டம் :-

     AIBDPA மத்தியச்  சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க கோவை AIBDPA மாவட்டச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு 20.11.2017 காலை 0100மணிக்கு “கவன ஈர்ப்பு தின ” ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர். L. உமாபதி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P.B. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் தோழர். G.பங்கஜவல்லி, தோழர். லியோ பிரான்ஸிஸ் ஜோசப் மற்றும் BSNLEU  Dist secy தோழர். C. ராஜேந்திரன் உட்பட பலர்  பேசினார். 80க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தை தோழர். நன்றிகூறி நிறைவு செய்தார்.

  [Read More…]