• தொழிலாளிவர்க்கச்சூரியன் தோழர்.சுகுமால் சென் Ex.MP மறைவு

  கொடி தாழ்த்தி அஞ்சலி செய்வோம்   தோழர்.சுகுமால் சென் Ex.MP மறைவுக்கு

   

    இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர். சுகுமால் சென் (22.11.2017) மறைவு செய்தியை மிகுந்த வேதனையோடு பகிர்ந்து கொள்கிறோம்.
  சிஐடியூ-வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். நிர்வாகியாக நீண்ட நாள் செயல் பட்ட தோழர். WFTU-ன் இணைந்த Trade Unions International of Public and Allied Services- பொதுச்செயலாளர். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளத்தின் தலைவர்/பொதுச்செயலாளர் போன்ற பொறுப்புகளை திறம்பட செய்தவர். மத்திய அரசு ஊழியர்  இயக்கங்களோடு நீண்ட தொடர்பில் பணி செய்த தோழர்.1982 முதல் 1994 வரை பாராளுமன்ற ராஜ்ஜிய சபை உறுப்பினர்.

         “இந்திய தொழிற்சங்க இயக்க வரலாறு” மற்றும் “சர்வதேச தொழிற்சங்க இயக்க வரலாறு”- ஆகிய இரு புத்தகங்களை மிகுந்த ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

        தோழரின் மறைவிற்கு கொடி தாழ்த்தி அஞ்சலி தெலுத்துவதோடு   அவர்தம் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.