- You are here :
- AIBDPATNC
- / Monthly archives for 2017/12
-
December 31, 2017
Author: aibdpatnc
அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள் !

மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் சங்க நிர்வாகிகள், அனைத்து ஓய்வூதியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
-
December 29, 2017
Author: aibdpatnc
IDA உயர்வு
01-01-2018 முதல் பஞ்சப்படி (IDA) 2.6 சதம் உயர்ந்து மொத்தம் 124.3+2.6 =126.9 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
-
December 28, 2017
Author: aibdpatnc
இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகத்தான தலைவர் தோழர். என். எம். சுந்தரம் மறைவு.

LICயை பொதுத்துறையில் பாதுகாத்திடும் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தியவரும், காப்பீட்டு ஊழியர்களின் தன்னிகரற்ற தலைவரும், தத்துவ வழிகாட்டியும், தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளரும், பொருளாதார மேதையுமான தோழர். N. M. சுந்தரம் (வயது80) கடந்த 26.12.2017ல் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் 29.12.2017 நடைபெற உள்ளது. அவர்தம் மறைவிற்கு நமது மாநிலச் சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
-
December 24, 2017
Author: aibdpatnc
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !

-
December 24, 2017
Author: aibdpatnc
AIBDPA 3வது புதுச்சேரி மாவட்ட மாநாடு.



23-12-2017 சனிக் கிழமை அன்று புதுச்சேரி BSNLEU மாவட்ட சங்கக் கட்டடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. ஜெயராமன் தலைமையில் புதுச்சேரி 3வது மாவட்ட மாநாடு உற்சாகமாக நடைபெற்றது. முன்னதாக தேசியக் கொடியை தோழர். S. ஜெயராமனும், சங்கக் கொடியை மாநிலச் செயலர் C. K. நரசிம்மனும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.தோழர். M. பாலசுப்பிரமணியன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலர் தோழர். P. சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.
மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றினார். AIBDPA மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி, சிறப்பு அழைப்பாளர் தோழர். S. முத்துகுமாரசாமி, கடலூர் மாவட்டச்செயலர் தோழர். I.M. மதியழகன், புதுவை SNEA மாவட்டச் செயலர் தோழர். ஹரிதாஸ், BSNLEU புதுவை மாவட்டச் செயலர் தோழர். A. சுப்பிரமணியன், மாவட்ட உதவித்தலைவர் தோழர். N. கொளஞ்சியப்பன், TNTCWU மாவட்டச்செயலர் தோழர். B. மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
மாவட்டத் தலைவராக தோழர். P. சக்திவேல், மாவட்டச் செயலராக தோழர். V. ராமகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளராக தோழர். M.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏகமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட மாநாட்டின் நிறைவாக தோழர். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
-
December 20, 2017
Author: aibdpatnc
புதுச்சேரி 3வது மாவட்ட மாநாடு.
நாள் :
2017 டிசம்பர் 23, சனிக்கிழமை.
இடம் :
புதுச்சேரி BSNLEU சங்க அலுவலகம் .
தலைமை :
தோழர். S. ஜெயராமன், மாவட்டத் தலைவர்,
வரவேற்புரை :
தோழர். P . சக்திவேல், மாவட்டச் செயலர்,
துவக்க உரை :
தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA.
வாழ்த்துரை :
தோழர். S. மாணிக்க மூர்த்தி, மாநிலத் தலைவர், AIBDPA.
தோழர். A. சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU.
தோழர். N.கொளஞ்சியப்பன், மாவட்ட உதவித் தலைவர், BSNLEU,
தோழர். B. மகாலிங்கம், மாவட்டச் செயலர், TNTCWU.
மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள்.
-
December 20, 2017
Author: aibdpatnc
-
December 16, 2017
Author: aibdpatnc
வேலூர் 3வது மாவட்ட மாநாடு.
நாள் : 2017 டிசம்பர் 19, செவ்வாய் கிழமை.
இடம் : வேலூர் K.M. நாதன் மஹால்.
தலைமை : தோழர். V. ஏழுமலை, மாவட்டத் தலைவர்,
தியாகிகளுக்கு அஞ்சலி : தோழர். R.பழனிச்சாமி,
வரவேற்புரை : தோழர். B.ஜோதி சுதந்திரநாதன், மாவட்டச் செயலர்,
துவக்க உரை : C.K. நரசிம்மன், மாநிலச் செயலர்.
சிறப்புரை :
தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA அகில இந்திய சங்க ஆலோசகர்,
தோழர். S. மாணிக்க மூர்த்தி, மாநிலத் தலைவர்
வாழ்த்துரை :
திரு. K. வெங்கட்ராமன், முதன்மை பொது மேலாளர், BSNL, வேலூர்.
மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள்.
-
December 16, 2017
Author: aibdpatnc
நாடெங்கும் தமிழ் நாடெங்கும் சக்திமிக்க வேலைநிறுத்தம் BSNLலில் -சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு – பாராட்டுக்கள் !
01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வீரம் செரிந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஆதரவு இயக்கங்களில் பங்கெடுத்த ஓய்வூதியர்களுக்கும் AIBDPA தமிழ் மாநில சங்கம் சபாஷ் சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும், முன்னணி தோழர்களையும், ஓய்வூதியர்களையும் மனதார வாழ்த்துகிறோம்.
இந்தப் போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

-
December 15, 2017
Author: aibdpatnc
ஓய்வூதியத்தை பாதுகாப்போம் !
ஓய்வூதியர்களை பாதுகாப்போம் !
ஓய்வூதியர் தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்போம் !
1982 டிசம்பர் 17ல் ஓய்வூதியத்தை பாதுகாக்க உச்சநீதி மன்றத்தில் மேஜர் D.S. நகரா தொடுத்த வழக்கில் கிடைத்த ஓய்வூதிய பாதுகாப்பை தொடரவும் அதனை போற்றிட தமிழமெங்கும் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு நடத்தும் அனைத்து இயக்கங்களிலும்நமது சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிட அனைத்து மாவட்டச் செயலர்களும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள மாநிலச் சங்கம் வேண்டுகிறது.