• 11-12-2017 நாடு தழுவிய தார்ணா – வெற்றிகரமாக்குவோம் !

  ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க 11-12-2017ல் நடைபெறும் நாடு தழுவிய தார்ணாவை – வெற்றிகரமாக்குவோம்  !

       கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தார்ணா போராட்டத்தை நடத்திட மத்தியச்சங்க அறைகூவலின்படி மாநிலத்தில் சிறப்பாக நடத்திடவும் நோட்டீஸ், பேனர், பிளக்ஸ் போன்ற விளம்பரங்களை செய்து தார்ணாவை வெற்றிகரமாக நடத்திட உரிய திட்டமிடலை அனைத்து மாவட்டச் செயலர்களும் செய்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

  கோரிக்கைகள்:-

  1) 01.01.2017 முதல் ஓய்வூதிய உயர்வு   வழங்கிடு !

  2) 12.05.2017 உத்தரவின்படி ஓய்வூதிய உயர்வில் ஆப்ஷன் (விருப்பம்) 3 வழங்கிய DOT ஓய்வூதியர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகை வழங்கிடு !!

  3) நிலைத்த மருத்துவப்படியாக பிரதி மாதம் ரூபாய் 2000/- வழங்கிடு !!!

  2 வது கட்ட  போராட்டம் :-

  ## 2017 டிசம்பர் 11 – அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தார்ணா நடத்துவது.