• வேலூர் 3வது மாவட்ட மாநாடு

  வேலூர் 3வது மாவட்ட மாநாடு.

  நாள் : 2017 டிசம்பர் 19, செவ்வாய் கிழமை.

  இடம் : வேலூர்  K.M. நாதன் மஹால்.

  தலைமை : தோழர். V. ஏழுமலை, மாவட்டத் தலைவர்,

  தியாகிகளுக்கு அஞ்சலி : தோழர். R.பழனிச்சாமி,

  வரவேற்புரை : தோழர். B.ஜோதி சுதந்திரநாதன், மாவட்டச் செயலர்,

  துவக்க உரை : C.K. நரசிம்மன், மாநிலச் செயலர்.

  சிறப்புரை :

  தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA அகில இந்திய சங்க ஆலோசகர்,

  தோழர். S. மாணிக்க மூர்த்தி, மாநிலத் தலைவர்

  வாழ்த்துரை :

  திரு. K. வெங்கட்ராமன், முதன்மை பொது மேலாளர், BSNL, வேலூர்.

  மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள்.

 • சக்திமிக்க வேலைநிறுத்தம் BSNLலில் – பாராட்டுக்கள்

  நாடெங்கும் தமிழ் நாடெங்கும் சக்திமிக்க வேலைநிறுத்தம் BSNLலில் -சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு – பாராட்டுக்கள் !

   

             01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வீரம் செரிந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஆதரவு இயக்கங்களில் பங்கெடுத்த ஓய்வூதியர்களுக்கும் AIBDPA தமிழ் மாநில சங்கம் சபாஷ் சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

        இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும், முன்னணி தோழர்களையும், ஓய்வூதியர்களையும் மனதார வாழ்த்துகிறோம்.

   இந்தப் போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடர்ந்திட வாழ்த்துக்கள்.