• மகளிர் தின வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !

  அன்பினில் அறிவினில் உறைவிடமாய் பெண் உயர்ந்து விளங்கிட – பெண் விடுதலையே சமூக வளர்ச்சி என்ற நோக்கில் அனைத்து மகளிரும் சமூக விடுதலையோடு உயர்ந்திட சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !

  போற்றுவோம் பெண்மையை !!

  பெண்ணின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம்.

 • வேலூரில் மகளிர் தினக் கொண்டாட்டம்.

  வேலூரில் AIBDPA சார்பில் மகளிர் தினக் கொண்டாட்டம்.

      2018 மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வேலூரில் உள்ள பெல்லியப்பா கட்டிடத்தில் வைத்து அன்று காலை 1000மணி அளவில் AIBDPA சார்பில் மாவட்டத் தலைவர் தோழர்.  V. ஏழுமலை தலைமையில் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை வேலூர் மாவட்டச்சங்கம் செய்து வருகிறது.

 • திருச்செங்கோட்டில் AIBDPA பொதுக்குழுக் கூட்டம்.

  திருச்செங்கோட்டில் AIBDPA சங்க ஆலோசகர் தோழர்.V.A.N.நம்பூதிரி பங்குபெரும்   AIBDPA  சங்க பொதுக்குழுக் கூட்டம்.

   

                    திருச்செங்கோட்டில் இன்று 04.03.2018 மாலை 0500 மணி அளவில் வெள்ளச்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் வைத்து AIBDPA பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

                 தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் நமது AIBDPA சங்க ஆலோசகர் தோழர். V. A. N. நம்பூதிரி மாலையில் நடைபெரும் AIBDPA பொதுக்குழு கூட்டத்திலும் பங்குபெருவதால் சேலம் மாவட்ட ஓய்வூதியர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

               அதில் மாநில உதவித் தலைவர் தோழர். P. ராமசாமி மற்றும் மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

 • AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

     AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

   

        AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 27.02.2018 அன்று சென்னையில் உள்ள BSNLEU சங்க அலுவலகக் கட்டிடத்தில் வைத்து சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். M. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். T. கோதண்டம் அஞ்சலி தீர்மானத்தோடு வரவேற்புரையையும் ஆற்றினார்.

        மாநில செயலாளர் தோழர். C. K. நரசிம்மன் கலந்து கொண்டு டெல்லி நடைபெற்ற பேரணி, மத்திய மாநிலச் சங்கங்களின் சிறப்பான போராட்டங்களால் பெற்ற சலுகைகளையும்,  DOT செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுகள், பினனர் தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தை முடிவுகள் அது சம்பந்தமான விமர்சனம்,  இன்றைய மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் படும் துயரங்களையும் குறிப்பாக ஓய்வூதியர்களின் சிரமங்களையும் தனது  சிறப்புரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

                      நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. முன்னதாக மாவட்ட மாநாட்டை ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

 • இனிய ஹோலி வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய ஹோலி  வாழ்த்துக்கள் !

  Men dance as others throw coloured powder on them during Holi celebrations in Kolkata, India, March 24, 2016. REUTERS/Rupak De Chowdhuri