• வேலூரில் மகளிர் தின கொண்டாட்டம்

    வேலூரில் விமரிசையாக நடைபெற்ற சர்வதேச  மகளிர் தின கொண்டாட்டம்.

     

                   08-03- 2018 வியாழக்கிழமை அன்று வேலூர் பெல்லியப்பா  கட்டிடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமையில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் மிக உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

              AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். C. ஞானசேகரன், மாநில அமைப்புச் செயலர் தோழர். K. கிருஷ்ண மூர்த்தி, BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.  C. தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர் தோழர். பிரவீனா சிறப்புரை ஆற்றினார். இன்றைய வாழ்வில் பெண்களின் நிலைபாடு, உடல் ஆரோக்கியம் பேணுவது, உணவு முறைகளில் நமது பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விவரித்ததோடு வாழ்வியலில்நமது கடமைகளையும் எடுத்துரைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் உட்பட 100 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

            சர்வதேச மகளிர் தின கருத்தரங்கை சிறப்பாக நடத்திய வேலூர் மாவட்டச் சங்கத்தை சபாஷ் சொல்லி தமிழ் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது. தொடரட்டும் இப்பணி !