• விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைவு

  நெஞ்சார்ந்த அஞ்சலி!

  மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியும்
  கடவுளுக்கு எதிரான மிகப்பெரும்
  அறிவியல் போராளியுமாய் இருந்த
  தன் அறிவால் மட்டுமே இதுவரை
  வாழ்ந்து வந்த மாபெரும் அறிஞர்
  ஸ்டீபன் ஹாக்கிங் இன்று தம்
  76 ஆம் வயதில் காலமானார்.
  அவருக்கு நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலி !!!

   

         ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, (ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) , ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.

        இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளை (black holes) களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியூட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன வென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்று பெயர்.

  சாதாரண மக்களுக்காக அவர் எழுதிய நூல்கள்-

  காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)

  கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)

  பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)

        ஆனால் எதிர்பாராத விதமாக இன்று தமது மூளையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரது அறிவியல் கருத்துகள், அறிவியல் உலகிற்கு மிகுந்த அசைவூக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள கருத்துகளாக என்றும் உயிர்ப்புடன் நிலவும். ஸ்டீபன் ஹாக்கிங்சைப் புறந்தள்ளிவிட்டு அறிவியலை எவரும் கற்க முடியாது.

  ஒரு வேளை, அறிவியல் மரணமடையும் காலத்தில்தான் ஸ்டீபன் ஹாக்கிங்சின் உண்மையான மரணம் நிகழும்.