• உற்சாகமாய் நடைபெற்ற 3வது நெல்லை மாவட்ட மாநாடு

  AIBDPA 3வது நெல்லை மாவட்ட மாநாடு.

                     AIBDPA 3வது நெல்லை மாவட்ட மாநாடு இன்று 25.03.2018ல் நெல்லை  “நவஜீவன் டிரஸ்ட் ” கட்டிடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலியை தோழர். S. முத்துச்சாமி செலுத்தினார். மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை துவக்கிவைத்து அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் விரிவான உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் போராட்டங்களின் முன்னேற்றமாக உதிய / பென்ஷன் மாற்றத்தில் அமைச்சருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தை, கூட்டு போராட்டத்தை கொச்சைபடுத்தும் சில சங்கங்களின் விமர்சனங்கள, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகள், GSTயால் ஏற்பட்ட தொழில் முடக்கம், பணமதிப்பு இழப்பால் மக்கள் பட்ட துன்பங்கள், மதவாத சக்திகளால் ஏற்படும் இன்னல்கள் என விரிவான உரையாற்றினார்.

          AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். S. தாமஸ், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர். S. வைகுண்ட மணி, BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். V. சீதாலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். AIBDPA மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில் பென்ஷன் மாற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி, மக்கள் பிரச்சனையில் அரசின் மெத்தனப்போக்கு, நாடு தழுவிய மக்கள், விவசாயிகள் போராட்டம், 78.2 சத நிலுவைத்தொகையில் உள்ள முரண்பாடுகள், மருத்துவ படி நிலுவைகளுக்காக மாநிலச் சங்கம் எடுத்துள்ள செயல்பாடுகள்,  விடுபட்ட ஊழியர்களின் பிரச்சனைகள், மாநில மத்தியச்சங்கங்கள் தீர்த்து வைத்த பிரச்சனைகள், மதுரையில் நடைபெற உள்ள மாநில செயற்குழு, சென்னையில் நடைபெற உள்ள அதாலத்தில் நமது சங்கம் சார்பில் கொடுத்துள்ள கோரிக்கைகள் என அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K.காளி பிரசாத், மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

       அனைத்து ஆசிரியர் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர். S.நெடுஞ்செழியன், மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் S.ராஜாமணி வாழ்த்துரை வழங்கினார். நவஜீவன் டிரஸ்ட் நிர்வாகி திரு. சந்திர சேகர நளன், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர். P. முத்துக்கிருஷ்ணன், BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். ராஜகோபால், மாவட்டச் செயலர் தோழர். N. சூசை மரிய அந்தோணி, AIBDPA மாவட்டச் செயலர்கள் தோழர். M. அய்யாச்சாமி (விருதுநகர்), தோழர்.A. மீனாட்சி சுந்தரம் (நாகர்கோவில்) தோழர். P.ராமர் (தூத்துக்குடி) TNTCWU மாவட்டச் செயலர் தோழர். S.முருகன், மாவட்ட மூத்த தோழர். A. வேம்புராஜா உட்பட பல தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். அமைப்புநிலை விவாதத்தில் தோழர். A. சுவாமி குருநாதன், தோழர். V. சீதாலட்சுமி  உட்பட பலர் பேசினர். மாநிலச்சங்கத்திற்கு நன்கொடையாக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது. அனைத்து தலைவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் கைப்பை வழங்கப்பட்டது.

                    புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துச்சாமி, மாவட்டச்செயலர் தோழர். D. கோபாலன், மாவட்டப் பொருளாளர் தோழர். V. சீதாலட்சுமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

          ஓய்வூதியமாற்றம் கிடைக்க நடைபெறும் கூட்டு போராட்டங்களுக்கு வாழ்த்து, புதிய பென்ஷன் ரத்து, துணை டவர் கம்பேனி ரத்து,  என 8 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்ட தணிக்கையாளர் தோழர். D. சந்திரபோஸ் நன்றி கூறினார். 

             சிறப்பான ஏற்பாடுகளோடு வித்தியாசமான நினைவுப்பரிசாக புத்தகங்கள் வழங்கிய மாவட்டச் சங்கத்தையும் அதன் முன்னணி தோழர்களையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி வரவேற்கிறது.