• சிறப்பாக நடைபெற்ற AIBDPA 4வது சென்னை மாவட்ட மாநாடு

  AIBDPA 4வது சென்னை மாவட்ட மாநாடு 

           AIBDPA 4வது சென்னை மாவட்ட மாநாடு 21.04.2018ல் சென்னை திருவல்லிக்கேணி தேரடி அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர்.  S. நடராஜா  தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட உதவிச் செயலர் தோழர். P.V. சிவசங்கரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை துவக்கிவைத்து மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் விரிவான துவக்கஉரை நிகழ்த்தினார்.

  AIBDPA மாநில அமைப்புச் செயலர் தோழர். B.C.கீதா, BSNLEU சங்க மாநில உதவிச் செயலர் தோழர்.  M. முருகையா,  மாவட்டத் தலைவர் தோழர். சரவணன், AIBSNLEA மாவட்டச் செயலர் தோழர். G. கலிய பெருமாள், AIPRPA மாவட்டச் செயலர் தோழர். M.R. மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். AIBDPA மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

                   பின்னர் அமைப்பு நிலை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் தோழர்கள். N. சாயிராம், C. சுவாமி குருநாதன் பங்கெடுத்தனர். ஓய்வூதியமாற்றம், BSNL MRS withvoucher திட்டத்தின் கணக்கிடும் நாட்கள் குறைப்பை ரத்து செய் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலர் தோழர். T.கோதண்டம் கொண்டுவந்த செயல்பாட்டறிக்கை, மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாயிராம் கொண்டுவந்த வரவு செலவு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்ட முடிவில்  மாவட்ட உதவிச் செயலர் தோழர். சுசிலா மோகனவேல் நன்றி கூறினார்.

   

  புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன், மாவட்டச்செயலர் தோழர். T.கோதண்டம் , மாவட்டப் பொருளாளர் தோழர். P. V. சிவசங்கரன்  ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

         சிறப்பான ஏற்பாடுகளை செய்து உற்சாகமாக மாநாட்டை நடத்திய சென்னை மாவட்டத் தோழர்களையும் புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

 • AIBDPA மதுரை மாவட்ட மாநாடு

  AIBDPA 3வது மதுரை மாவட்ட மாநாடு 

           AIBDPA 3வது மதுரை மாவட்ட மாநாடு கடந்த 15.04.2018ல் மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகம் வாடிக்கையாளர் சேவைமைய மனமகிழ் மன்றத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர்.  மகபூப் ஜான் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்ச்சியின் ஆரம்பமாக  சங்கக் கொடியை உற்சாக கோஷங்களுக்கிடையே மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலர் தோழர். N.C. ஆதீஸ்வரன்  வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை துவக்கிவைத்து அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் விரிவான துவக்கஉரை நிகழ்த்தினார்.

                   AIBDPA மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில் பென்ஷன் மாற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி, மக்கள் பிரச்சனையில் அரசின் மெத்தனப்போக்கு, நாடு தழுவிய மக்கள், விவசாயிகள் போராட்டம், 78.2 சத நிலுவைத்தொகையில் உள்ள முரண்பாடுகள், மருத்துவ படி நிலுவைகளுக்காக மாநிலச் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்,  விடுபட்ட ஊழியர்களின் பிரச்சனைகள் மீது தலையீடு , மாநில மத்தியச்சங்கங்கள் தீர்த்து வைத்த பிரச்சனைகள் என விரிவான  சிறப்புரை ஆற்றினார். 

            AIBDPA மத்தியச் சங்க ஆலோசகர் தோழர். V.A.N நம்பூதிரி,    BSNLEU சங்க மாவட்டச் செயலர் தோழர். S. செல்வின் சத்தியராஜ், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார், AIBDPA மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா, TNTCWU சங்க மாவட்டச் செயலர் தோழர். சோணமுத்து, AIBDPA மாநில அமைப்புச் செயலர் தோழர். செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். ஜான் போர்ஜியா, மாவட்டச்செயலர் தோழர். மேனுவல் பால்ராஜ், மாவட்டப் பொருளாளர் தோழர். R.S. வேல்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

         சிறப்பான ஏற்பாடுகளை செய்து உற்சாகமாக மாநாட்டை நடத்திய மதுரை மாவட்டத் தோழர்களுக்கும் புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

 • மதுரை மாநிலச் செயற்குழுவில்………

  மதுரை மாநிலச் செயற்குழுவில்………

                      மதுரையில் 16.04.2018 நடைபெற மாநிலச் செயற்குழுவை துவக்கி வைத்து நமது மத்திய சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி விரிவான உரை நிகழ்தினார். அவரது உரையில்….. 

             ஊதிய மாற்றம் / ஓய்வூதிய மாற்றம்  வேண்டும், BSNLலில் கட்டாய ஓய்வு கூடாது, மத்திய அரசு துணை டவர் கம்பேனி அமைப்பதை கைவிடக்கோரியும்   கேட்டு  சத்தியாக்கிரகம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை AUAB சங்கங்களும் நமது AIBDPA சங்கமும் போராடுகின்றன. மேலும் டெல்லியில் பேரணி நடத்தியதுடன் நமதுதுறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாராம்சத்தையும் விளக்கினார்.

                    BSNLலில் பென்ஷன்மாற்றம் / ஊதிய மாற்றம் 3வது ஊதியமாற்றக் குழுவின் அடிப்படையில் 15 சத fitmentடோடு IDAவில் வழங்கவேண்டும் என AUAB சங்கங்கள்போராட்டம் இன்றும் தொடர்கிறது. மேலும் மருத்துவப்படி குறைப்பு BSNL MRSல் With voucher / without voucher ஓய்வூதியர்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து BENLEU மற்றும் AIBDPA மத்தியச் சங்கங்கள் CMD நிர்வாகத்திற்கு தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளன. மேலும் மருத்துவப்படி மாதம்தோறும் ரூபாய் 2000/-ஆக வழங்கிடவும், Extra Increment பெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2 சத நிலுவைத்தொகை பெற மத்தியச்சங்கம் தொடர்ந்து முயற்சிக்கும்.  மத்திய அரசின் பங்கு விற்பனை, பொதுத்துறை விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தவேண்டும்.

                     கேரள மாநில அரசு வழங்கியுள்ள மக்கள் நலன், மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் நலன் சார்ந்த நலத்திட்டங்களை விளக்கிப் பேசினார்.  மேலும் மத்திய அரசு மக்கள் நலன், மூத்த குடிமக்கள் / ஓய்வூதியர் நலன்களை புறக்கணித்து செயல்படுவதை விளக்கினார். நமது சங்கத்தின் போராட்டக் குணங்களாலும் சாதனைகளாலும் நாடெங்கிலும் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் டெலிபென்ஷனர் எண்ணிக்கை உயர்த்திட  மாநிலச் செயற்குழு திட்டமிட கேட்டுக்கொண்டார். நாட்டில் நிலவும் மதவெறி அரசியலை எதிர்த்தும், பாலியியல் வன்முறைகளை எதிர்த்தும் தொடர்ந்து போராடவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார். ஓய்வூதியர்கள் தங்ஙளின் நலனுக்காக மட்டும் போராடாமல் சமூக நலன்களை பேணிக்காத்திடவும் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

  மாநிலச் செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

  1) ஓய்வூதிய மாற்றம் 01.01.2017 முதல் 15 சத fitmentடுடன் IDAவில் வழங்க வேண்டும்.

  2) ஊதிய மாற்றம் 01.01.2017 முதல் 15 சத fitmentடுடன் IDAவில் வழங்க வேண்டும் .

  3) துணை டவர் கம்பேனி அமைக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும்.

  4) BSNLMRS காலாண்டு மருத்துவப்படி வழங்கும் முடிவில் நிலுவையில் உள்ள அக்டோபர் 2017முதல் மார்ச் 2018 வரை வழங்க வேண்டிய மருத்துவப் படியினை உடனடியாக வழங்க வேண்டும்.

  5) உச்ச நீதிமன்ற முடிவின் படி “காவேரி மேலாண்மை வாரியம்” உடனடியாக அமைக்க வேண்டும்.

  6) தூத்துக்குடியில் இயங்கும் மக்களுக்கு எதிரான “நாசகர ஸ்டெர்லைட்” ஆலையை உடனே மூட வேண்டும்.

  7) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடு

  8) 01.10.2000 முதல் 31.07.2001 முடிய உள்ள பென்ஷன் அனாமலியை உடனே தீர்க்க வேண்டும்.

  9) 78.2 சத IDA இணைப்பு நிர்ணயத்தில் கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வையும் கணக்கிட்டு நிலுவைத் தொகை பெறாத ஓய்வூதியர்களுக்கு காலதாமதமின்றி  நிலுவைத் தொகை வழங்கிடவேண்டும்.

  10) 01.01.2007 முதல் 09.06.2013 முடிய ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பென்ஷன், கிராஜுவெட்டி, கமுட்டேஷன், விடுமுறை ஈட்டுப்படி 78.2சத IDA நிர்ணயித்தில் நிலுவைத்தொகை வழங்கிடு.

  11) திட்டமான மாத மருத்துவப்படி (FIXED MEDICAL ALLOWANCE) ரூபாய் 2000/-மாக வழங்கவேண்டும்.

  12) BSNL MRSல் With voucher திட்டத்தின் 23 நாட்கள் என்ற கால அளவு உத்தரவு தொடர வேண்டும். நாட்குறைப்பு உத்தரவை ரத்து செய்திடு.

  13) 01.01.2007 முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் 01.01.2007 பின் ஓய்வு பெற்றவர்களுக்கும் இடையே BSNL MRSல் Without voucher திட்டத்தின் வழங்குவதில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

  14) சென்னை CCA அலுவலகத்தில் உள்ள பணியாளர் பற்றாக்குறையால் ஓய்வூதியர் பலன்களை பெற காலதாமதம் ஏற்படுவதை தடுக்க உடனடி தீர்வுகாண வேண்டும்.

  15) வங்கிகள் / அஞ்சலகங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கவேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்ட சேவையை மேம்படுத்த வேண்டும். மாநிலச் சங்கம்  தலையிட்ட பின்பே ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள் வழங்கும் நிலையே பல வங்கிகளில் / அஞ்சலகங்களில் நிலவுகிறது. ஓய்வூதியமே வாழ்க்கையின் ஒரு ஆதாரமாக விளங்குவதால் ஓய்வூதியம் /பணப்பலன்களை உரிய கவனம் செலுத்தி தாமதம் இன்றி வழங்கிட மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

  16) நாட்டில் நிலவும் பாலியல் வன்கொடுமைகள் மதவெறி எதிர்ப்பினால் நிலவும் கொடுமைகளுக் கெதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை இம்மாநிலச் செயற்குழு கண்டிப்பதோடு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறது.

  செயற்குழு முடிவுகள் :-

  அ) மாநில அளவில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திட மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி திட்டமிடுவது.

  ஆ) டெலி பென்ஷனர் பத்திரிக்கை எண்ணிக்கையை உயர்த்திட திட்டமிடுவது.

  இ) கிளைகள் அமைக்காத மாவட்டங்கள் உரிய கவனம் செலுத்தி கிளைகளை உடனடியாக அமைக்க திட்டமிடுவது.

  ஈ) மாவட்ட மாநாடுகளை நடத்த வேண்டிய மாவட்டங்கள் உரிய கால அவகாசத்தில் மாவட்ட மாநாடுகளை நடத்த திட்டமிடுவது.

  உ) தர்மபுரி மாவட்ட அமைப்பு மாநாட்டை ஜூலை 2018ல் நடத்துவது.

  ஊ) 5வது மாநில மாநாட்டை கோவை அல்லது ஈரோடு மாவட்டங்களில் நடத்திடவும் அதற்கான மாநிலச் சங்க ஆலோசனை அடிப்படையில் தீர்மானித்திடவும்  ஆலோசிக்கப்பட்டது.

  போராட்ட முடிவுகள்  :-

  A) BSNL MRS மெடிக்கல் அலவன்ஸ்,

  B) 78.2 சத IDA Extra Increment நிலுவைத்தொகை பிரச்சனை,

  C) சென்னை CCA அலுவலகத்தில் உள்ள பணியாளர் பற்றாகுறையை நீக்கிடு

  உள்ளிட்ட தேங்கிக்கிடக்கும் பிரச்சனைகளை  BSNL நிர்வாகம் / CCA அலுவலகங்கள் தீர்த்திடக்கோரி போராட்ட வடிவங்களை தயாரித்ததுடன் அவற்றை மத்தியச்சங்க ஆலோசனையுடன் நிறைவேற்ற மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

  Jpeg

  விருதுநகர் மாவட்டத்தில் சில ஓய்வூதியர்களின் தீர்க்கப்படாத பணபலன் பிரச்சனைகளை மாநிலச் சங்கம் தலையிட்டு உடனடியாக  தீர்வு கண்டதால் அவர்களின் சிறப்பு நன்கொடை ரூபாய் 5000/-தை மாநிலச் செயலரிடம் VGR மாவட்டச் செயலர். தோழர். M. அய்யாச்சாமி வழங்கினார். மாநில செயற்குழு பாராட்டுகிறது.

 • உற்சாகமாய் துவங்கிய AIBDPA மாநிலச்செயற்குழு கூட்டம்

   சிறப்பாக நடைபெற்ற மதுரை  AIBDPA மாநிலச்செயற்குழு கூட்டம்.

       மதுரை( AIIEA )காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் “சுனில்மைத்திராய” பவனில் வைத்து AIBDPA மாநிலச்செயற்குழு கூட்டம் 16.04.2018 இன்று மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி தலைமையில் துவங்கியது. முன்னதாக சங்கக் கொடியினை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே நமது சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த மாநிலச் செயற்குழுவில் மாநில அமைப்பு செயலர் தோழர். N. சின்னையன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மதுரை மாவட்ட முன்னாள் செயலர் தோழர். N. C. ஆதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் செயற்குழுவை துவக்கி வைத்து நமது மத்திய சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி விரிவான உரை நிகழ்த்தினார்.

        செயல்பாட்டுஅறிக்கையை முன்வைத்து மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் உரையாற்றினார்.

  Jpeg

  மதுரை மாவட்டம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க அலுவலகத்தில் 16-04-2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற நமது AIBDPA சங்கத்தின் மாநில செயற்குழுவை AIBDPA அகில இந்திய சங்க துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ், BSNLEU மதுரை மாவட்டச் செயலர் தோழர்.S. செல்வின் சத்தியராஜ், TNTCWU மதுரை மாவட்டச்செயலர் தோழர். N. சோணமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

        நமது AIBDPA சங்கத்தின் மாநில செயற்குழுவை அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத் வாழ்த்திரை வழங்கினார்.

      மாநிலச்செயற்குழுவில் 19 மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். 16 மாவட்டச் செயலர்களும் 1 மாவட்ட கன்வீனரும் விவாதத்திலும் பங்கெடுத்தனர். விவாதத்தை நிறைவு செய்து மாநிலச்செயலர் தோழர். C.K.N நிறைவுரை ஆற்றினார். பின்னர் செயல் பாட்டறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

            மாநிலப் பொருளாளர் தோழர். S. நடராஜா பொருளாதார நிலையை விளக்கியதோடு, அவர் வழங்கிய  வரவுசெலவு  அறிக்கையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 16 தீர்மானங்கள் தீர்மானக் கமிட்டி தலைவர் தோழர்.N. குப்புசாமி தலைமையில் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

            மாநிலச் செயற்குழுவை சிறப்பான தங்குமிடம், குளுரூட்டப்பட்ட மீட்டிங் ஹால், சிறப்பான உணவு மற்றும் கவனிப்பு என்று ஏற்பாடுகளைச் செய்து செய்துஅசத்திய மதுரை மாவட்டச் சங்கங்களான AIBDPA, BSNLEU, TNTCWU வை மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுவதோடு அதன் ஒரு பகுதியாக முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். N.C. ஆதீஸ்வரனுக்கும் இன்னாள் மாவட்டச் செயலர் தோழர்.  மேனுவல் பால்ராஜ்கும் மத்தியச் சங்க நிர்வாகிகள் தோழர்கள்.S. மோகன்தாஸ், K. காளிபிரசாத் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

      தேங்கிக்கிடக்கும் பிரச்சனைகளை  BSNL நிர்வாகம் / CCA அலுவலகங்கள் தீர்த்திடக்கோரி போராட்ட வடிவங்களை தயாரித்ததுடன் அவற்றை மத்தியச்சங்க ஆலோசனையுடன் நிறைவேற்ற மாநில செயற்குழு முடிவு செய்தது.

  Jpeg

           நிறைவாக மாநில உதவிச் செயலர் தோழர்.N. குப்புசாமி நன்றிகூற மாநில  செயற்குழு  நிறைவுபெற்றது.

   

 • விளம்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய  விளம்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 • தேசம் தழுவிய போராட்டங்களில் AIBDPA ஓய்வூதியர்கள் !

  மாநில / BSNL நிறுவன நலனை காத்திடும் போராட்டங்களிலும் AIBDPA ஓய்வூதியர்கள்.

           இன்று 12.04.2018 தமிழக AIBDPA ஓய்வூதியர்கள் இரு பெரும் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஒன்று நமது BSNL நிறுவனம் காக்கும் போராட்டம். துணை டவர் கம்பேனி துவங்க ஏற்பாடுகள் செய்யும் மத்திய அரசை கண்டித்து AUAB நடத்தும் நாடு தழுவிய தார்ணாவில் பங்களிப்பு.

          மற்றொன்று – தமிழகத்தை தரிசாக மாற்றத்துடிக்கும் மத்திய BJP அரசின் செயல்பாட்டை கண்டித்தும் உடனே “காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடியை விஷமாக்கும் நாசகார “ஸ்டெர்லைட்டை” மூடக்கோடியும் தமிழக அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் திரளாக நமது சங்கத் தோழர்கள் கலந்து கொண்டதை மாநிலச் சங்கம் நன்றியுடன் பாராட்டுகிறது.

  ஈரோடு மாவட்டம்:-

           BSNL நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 12.4.18 டவர் துணை நிறுவனம் அமைக்கும் மத்திய மோடி அரசின் முடிவை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி மற்றும் காங்கேயம் ஆகிய மூன்று மையங்களில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.  நமது AIBDPA மாவட்ட சங்கம் சார்பில் எல்லா மையங்களிலும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலர் தோழர் சின்னசாமி கோபியிலும், மாநில துணை செயலாளர் தோழர் குப்புசாமி ஈரோட்டிலும் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

  விருதுநகர் மாவட்டம்:-

  தூத்துக்குடி மாவட்டம்:-

  காவிரிமேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மத்திய- மாநில அரசு மற்றும் ஓய்வூதியர்சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் மாலைநேர தார்ணா- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு நடைபெற்றது. AIBDPA ஓயவூதியர்களும் கலந்து கொண்டனர்.

  நாகர்கோவில் மாவட்டம்:-

  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மத்திய- மாநில அரசு மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் மாலைநேர தர்ணா-நாகர்கோவில் தோழர் ஜீவா சிலை முன்பு  இன்று-12-04-2018 மாவட்ட தலைவர் P. இராஜநாயகம் (AIPRPA) தலைமையில், TNGPA மாவட்டத் தலைவர் P.அல்போன்ஸ் துவக்கி வைக்க,TNRTA மாவட்ட தலைவர் C.அய்யப்பன் பிள்ளை, ஒருங்கிணைப்புகுழு பொருளாளர் S.சுப்பிரமணியன் (மத்திய அரசு ஓய்வூதியர்) V. ஜெயராமன் (மாநில துணைத்தலைவர், TNEB ஓய்வூதியர்சங்கம்) M. சுந்தரராஜன் (TNSTC ஓய்வூதியர் சங்கம்) A.மீனாட்சி சுந்தரம் ( BSNL ஓய்வூதியர் சங்கம்) ஆகியோர் உரையாற்ற நெல்லை கோட்ட ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் M.V. குழந்தைசாமி நிறைவுரையாற்ற மாலை5.30 மணிக்கு நிறைவடைந்த தர்ணா போராட்டத்தில் 10 மகளிர் உட்பட 155 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

  கோவை மாவட்டம்:-

  நெல்லை மாவட்டம் :-

  தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், ஸ்டெர்லைட்டை முழுமையாக மூடிடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை பாரத வங்கி எதிரில் கூட்டமைப்பு தலைவர் சி.கருப்பையா தலைமையில் செயலாளர் எஸ்.வைகுண்டமணி முன்னிலையில் மின்னரங்க ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ராஜாமணி துவக்கிவைத்தார். அனைத்து ஆசிரியர் ஓய்வுபெற்ற அமைப்பின் ஏ.ஆதிமூலம், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் எஸ்.குமாரசாமி, போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொ.மனோகரன், பி.எஸ்.என்.எல் & டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கத்தின் துறை.கோபாலன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் மாநிலச்செயலாளர் எஸ்.ஆறுமுகம் மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தையும் மக்களின் திரண்டெழுந்த போராட்டங்களையும் பற்றி விளக்கிப்பேசி நிறைவு செய்தார்.

  கும்பக்கோணம் மாவட்டம் :-

 • AIBDPA மதுரை மாநில செயற்குழு கூட்டம் இடமாற்றம்

  AIBDPA மதுரை மாநில செயற்குழு கூட்டம் இடமாற்றம்.

  மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் கவனத்திற்கு !

           நமது மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 16.04.2018 காலை 10மணி அளவில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள அகில இந்திய காப்பீட்டு  ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிடம், ( “தோழர்.மைத்திரேயன் இல்லம்”), (சங்கர் டீ கடை அருகில்) நடைபெறுவதால் புதிய முகவரியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் – மாநிலச் செயலர்.

     பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் ரெயிலில் வரும் தோழர்கள் அண்ணா பேருந்து நிலையம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் வரவும்.

             மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வரும்  தோழர்கள் அண்ணா பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்தில் வரவும்.

 • கரூரில் AIBDPA கிளை உதயம்

  திருச்சி மாவட்டம்  கரூரில் AIBDPA புதிய கிளை உதயம் உற்சாகமாய் நடைபெற்றது.

            அகில இந்திய BSNL – DOT ஓய்வூதியர் சங்க கரூர் கிளையின் அமைப்புக் கூட்டம் கடந்த 03.04.2018 செவ்வாய்க்கிழமை அன்று தோழர். P. இளங்கோ தலைமையில் கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து உற்சாகமாய் நடைபெற்றது. துவக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை AIBDPA திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் P. கிருஷ்ணன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர். I. ஜாண்பாட்சா வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு கிளையின் அமைப்புதின கூட்டத்தை துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.

              AIBDPA மாநில துணை செயலாளர் தோழர் . N. குப்புசாமி சிறப்புரை ஆற்றினார்.  தோழர்கள் J. ஜெயராஜ் TNPTF மற்றும் தோழர். T. தேவராஜ் மாவட்ட தலைவர் BSNEU வாழ்த்துரை வழங்கினர்.

   கிளையின் புதிய நிர்வாகிகளாக தலைவர் P. இளங்கோ, செயலாளர் P. நாகராஜ், பொருளாளராக P. ராமசாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்ட முடிவில் கிளை பொருளாளர் தோழர். P. ராமசாமி நன்றி கூறினார்.

           கரூர் கிளை அமைப்பு தின கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திய  திருச்சி மாவட்ட சங்கத்தையும் கலந்து கொண்ட தோழர்களையும் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுவதோடு கிளை சிறப்பாக இயங்க வாழ்த்துகிறது.