• கரூரில் AIBDPA கிளை உதயம்

    திருச்சி மாவட்டம்  கரூரில் AIBDPA புதிய கிளை உதயம் உற்சாகமாய் நடைபெற்றது.

              அகில இந்திய BSNL – DOT ஓய்வூதியர் சங்க கரூர் கிளையின் அமைப்புக் கூட்டம் கடந்த 03.04.2018 செவ்வாய்க்கிழமை அன்று தோழர். P. இளங்கோ தலைமையில் கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து உற்சாகமாய் நடைபெற்றது. துவக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை AIBDPA திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் P. கிருஷ்ணன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர். I. ஜாண்பாட்சா வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு கிளையின் அமைப்புதின கூட்டத்தை துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.

                AIBDPA மாநில துணை செயலாளர் தோழர் . N. குப்புசாமி சிறப்புரை ஆற்றினார்.  தோழர்கள் J. ஜெயராஜ் TNPTF மற்றும் தோழர். T. தேவராஜ் மாவட்ட தலைவர் BSNEU வாழ்த்துரை வழங்கினர்.

     கிளையின் புதிய நிர்வாகிகளாக தலைவர் P. இளங்கோ, செயலாளர் P. நாகராஜ், பொருளாளராக P. ராமசாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்ட முடிவில் கிளை பொருளாளர் தோழர். P. ராமசாமி நன்றி கூறினார்.

             கரூர் கிளை அமைப்பு தின கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திய  திருச்சி மாவட்ட சங்கத்தையும் கலந்து கொண்ட தோழர்களையும் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுவதோடு கிளை சிறப்பாக இயங்க வாழ்த்துகிறது.