• தேசம் தழுவிய போராட்டங்களில் AIBDPA ஓய்வூதியர்கள் !

  மாநில / BSNL நிறுவன நலனை காத்திடும் போராட்டங்களிலும் AIBDPA ஓய்வூதியர்கள்.

           இன்று 12.04.2018 தமிழக AIBDPA ஓய்வூதியர்கள் இரு பெரும் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஒன்று நமது BSNL நிறுவனம் காக்கும் போராட்டம். துணை டவர் கம்பேனி துவங்க ஏற்பாடுகள் செய்யும் மத்திய அரசை கண்டித்து AUAB நடத்தும் நாடு தழுவிய தார்ணாவில் பங்களிப்பு.

          மற்றொன்று – தமிழகத்தை தரிசாக மாற்றத்துடிக்கும் மத்திய BJP அரசின் செயல்பாட்டை கண்டித்தும் உடனே “காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடியை விஷமாக்கும் நாசகார “ஸ்டெர்லைட்டை” மூடக்கோடியும் தமிழக அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் திரளாக நமது சங்கத் தோழர்கள் கலந்து கொண்டதை மாநிலச் சங்கம் நன்றியுடன் பாராட்டுகிறது.

  ஈரோடு மாவட்டம்:-

           BSNL நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 12.4.18 டவர் துணை நிறுவனம் அமைக்கும் மத்திய மோடி அரசின் முடிவை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி மற்றும் காங்கேயம் ஆகிய மூன்று மையங்களில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.  நமது AIBDPA மாவட்ட சங்கம் சார்பில் எல்லா மையங்களிலும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலர் தோழர் சின்னசாமி கோபியிலும், மாநில துணை செயலாளர் தோழர் குப்புசாமி ஈரோட்டிலும் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

  விருதுநகர் மாவட்டம்:-

  தூத்துக்குடி மாவட்டம்:-

  காவிரிமேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மத்திய- மாநில அரசு மற்றும் ஓய்வூதியர்சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் மாலைநேர தார்ணா- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு நடைபெற்றது. AIBDPA ஓயவூதியர்களும் கலந்து கொண்டனர்.

  நாகர்கோவில் மாவட்டம்:-

  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மத்திய- மாநில அரசு மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் மாலைநேர தர்ணா-நாகர்கோவில் தோழர் ஜீவா சிலை முன்பு  இன்று-12-04-2018 மாவட்ட தலைவர் P. இராஜநாயகம் (AIPRPA) தலைமையில், TNGPA மாவட்டத் தலைவர் P.அல்போன்ஸ் துவக்கி வைக்க,TNRTA மாவட்ட தலைவர் C.அய்யப்பன் பிள்ளை, ஒருங்கிணைப்புகுழு பொருளாளர் S.சுப்பிரமணியன் (மத்திய அரசு ஓய்வூதியர்) V. ஜெயராமன் (மாநில துணைத்தலைவர், TNEB ஓய்வூதியர்சங்கம்) M. சுந்தரராஜன் (TNSTC ஓய்வூதியர் சங்கம்) A.மீனாட்சி சுந்தரம் ( BSNL ஓய்வூதியர் சங்கம்) ஆகியோர் உரையாற்ற நெல்லை கோட்ட ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் M.V. குழந்தைசாமி நிறைவுரையாற்ற மாலை5.30 மணிக்கு நிறைவடைந்த தர்ணா போராட்டத்தில் 10 மகளிர் உட்பட 155 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

  கோவை மாவட்டம்:-

  நெல்லை மாவட்டம் :-

  தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், ஸ்டெர்லைட்டை முழுமையாக மூடிடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை பாரத வங்கி எதிரில் கூட்டமைப்பு தலைவர் சி.கருப்பையா தலைமையில் செயலாளர் எஸ்.வைகுண்டமணி முன்னிலையில் மின்னரங்க ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ராஜாமணி துவக்கிவைத்தார். அனைத்து ஆசிரியர் ஓய்வுபெற்ற அமைப்பின் ஏ.ஆதிமூலம், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் எஸ்.குமாரசாமி, போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொ.மனோகரன், பி.எஸ்.என்.எல் & டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கத்தின் துறை.கோபாலன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் மாநிலச்செயலாளர் எஸ்.ஆறுமுகம் மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தையும் மக்களின் திரண்டெழுந்த போராட்டங்களையும் பற்றி விளக்கிப்பேசி நிறைவு செய்தார்.

  கும்பக்கோணம் மாவட்டம் :-