மார்ச்சில் மதுரை மாவட்ட மாநாடு மற்றும் மாநிலச் செயற்குழு

25-01-2016ல் நடைபெற்ற மதுரை மாவட்ட சிறப்புக்கூட்டத்தில் முடிவு.

          தோழர். G. கதிரேசன் தலைமையில் நடைபெற்ற மதுரை மாவட்ட சிறப்புக் கூட்டம் கடந்த 25-01-2016 அன்று மதுரையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். ஆதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையாக 78.2 சத பஞ்சப்படி இணைப்பு நிலையினையும், மத்திய அரசின் 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளில் ஓய்வூதியர்களின் சலுகைகள் மற்றும் புன்னகையுடன் சேவை என்ற கோஷத்துடன் பிஎஸ்என்எலின் வளர்ச்சியில் நமது பங்கு என்ற விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

         கூட்டத்தின் முடிவில் 2016 மார்ச்சில் மதுரை மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும் மறுநாள் மாநில செயற்குழுவை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தலைவர் தோழர். S.முருகேசன் மறைவையொட்டி புதிய மாவட்டத் தலைவராக மாவட்ட உதவித்தலைவர் தோழர். மகபூப் ஜானும் காலியான மாவட்ட உதவித்தலைவர் பதவிக்கு தோழர். முபாரஹும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

Leave a Reply