78.2 பஞ்சப்படி இணைப்பு

DOT உறுப்பினர் (நிதி)யுடன் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

          கடந்த 28-01-2016 அன்று ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 சத பஞ்சப்படி இணைப்பு சம்பந்தமாக DOT உறுப்பினர் (நிதி) அன்னி மொராயிஸுடன் நமது AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி விரிவான விவாதம் நடத்தினார்.

       சட்ட அமைச்சகத்தின் குறிப்பாணைகளை கணக்கில்  கொண்டு அதற்கான விளக்கங்களுடன்  கேபினட் குறிப்புகள் இறுதி செய்யப்பட்டு DOT செயலர் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரின் ஒப்புதலுடன் கேபினெட்டின் இறுதி ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்ற விபரங்களை DOT உறுப்பினர் (நிதி) தெரிவித்தார்.

Leave a Reply