AIBDPA அகில இந்திய 2வது மாநாடு – திருப்பதி

சிறப்பாக துவங்கியது

02-02-2016 திருப்பதியில்

AIBDPA 2வது அகில இந்திய மாநாடு .

        2000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட AIBDPA அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி நகரில் (S.K. வியாஸ் நகர்) ஸ்ரீ ராம துளசி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக 02-02-2016 காலை 1000 மணி அளவில் துவங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக தேசியக் கொடியை அகில இந்திய தலைவர் தோழர். A.K. பட்டாசார்ஜியும், சங்கக் கொடியை சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரியும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.

             வரவேற்பு கமிட்டி தலைவர் திரு. Y. ஸ்ரீனிவாசலு ரெட்டி, MLC வரவேற்புரை ஆற்றினார். மாநிலங்களவை உறுப்பினர் தோழர். T.K. ரங்கராஜன் துவக்க உரை ஆற்றினார். BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ, சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, BSNLCCWF சம்மேளனச் செயலர் தோழர். அனிமேஷ் மித்ரா, AIPRPA பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரன், AIBDPA பொதுச் செயலர் தோழர். K.G.ஜெயராஜ், AIBDPA பேட்ரன் தோழர். P.V. சந்திரசேகரன், மற்றும் BSNLEU ஆந்திர மாநிலச் செயலர் மற்றும் AGS தோழர். J. சம்பத்ராவ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

        மாலையில் பிரதிநிதிகள் விவாதத்தை துவக்கி வைத்து AIBDPA பொதுச்செயலர்  தோழர்.  K. G. ஜெயராஜ் ஆண்டறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் தோழர். M.P. குன்கானந்தன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார்.

              திருப்பதியில் 2016 பிப்ரவரி 03ம் தேதி AIBDPA அகில இந்தியமாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சி துவங்கியது.
துவக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாளராக தோழர். ஜோதி சுதந்திரநாதன் வேலூர் மாவட்டச் செயலர் பிரதிநிதி விவாதத்தை துவக்கிவைத்தார். மேலும் தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் 
தமிழகத்தின் சார்பாளராக சார்பாளர் விவாதத்தில் கலந்து கொண்டார்.

          மாநாட்டின் நிறைவாக அகில இந்திய சங்கத்தின் தலைவராக தோழர். அனந்த பட்டாசார்ஜி,  AIBDPA பொதுச் செயலராக தோழர். K.G. ஜெயராஜ், பொருளாளராக அரவிந்தாட்சன் நாயர், AIBDPA பேட்ரனாக தோழர். P.V. சந்திரசேகரன், சங்க ஆலோசகராக தோழர். V.A.N. நம்பூதிரி ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 தமிழகத்தை சேர்ந்த தோழர். S. மோகன்தாஸ் அகில இந்திய உதவித் தலைவராகவும், தோழர். K. காளி பிரசாத் அமைப்புச் செயலராகவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய அகில இந்திய நிர்வாகிகளை தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. 

 

Leave a Reply