வேலூர் தோழர்களுக்கு பாராட்டு.

காணும் பொங்கலன்று ஓய்வூதியர்களை வீட்டிற்கே சென்று சந்தித்து வாழ்த்து கூறிய வேலூர் தோழர்கள்.

                 17-01-2015 அன்று வேலூர் மாவட்ட தோழர்கள் AIBDPA மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலை , மாவட்டச் செயலர் தோழர் ஜோதி சுதந்திரநாதன், தோழர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தோழர் பார்த்தசாரதி மற்றும் பல தோழர்கள் நமது ஓய்வூதியர் சங்கத் தோழர்களை அவர்களின்  வீட்டிற்கே சென்று பொங்கல் வாழ்த்து கூறியது பாராட்டிற்குரியது.

                   மறைந்த திரு. சந்தானம் அவர்களின் துணைவியார்  திருமதி. சந்தானம் அவர்கள் பொங்கல் வாழ்த்து கூறச்சென்ற நமது தோழர்களை நா தழுதழுக்க வரவேற்றது நெகிழ்ச்சி அடையவைத்ததாக  தோழர். ஜோதி சுதந்திரநாதன் கூறினார்.

                   இதுபோன்ற நிகழ்வுகளில் மற்ற மாவட்டச் சங்கத் தோழர்களும் ஈடுபடவேண்டும்  என மாநிலச் சங்கம் வேண்டுவதோடு வேலூர் தோழர்களையும் மனதார பாராட்டுகிறது.

 

 

 

Leave a Reply