சிறப்பான கருத்தரங்கம் வேலூரில்

அண்ணல் டாக். அம்பேத்கார் 125வது பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்.

IMG-20160718-WA0055IMG-20160718-WA0045IMG-20160718-WA0047

17-07-2016 அன்று AIBDPA மற்றும் AIPRPA இணைந்து வேலூரில் “சட்டச்சிற்பி அண்ணல்” டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கத்தை நடத்தினர்.

          200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கத்தை தோழர்கள் M. சிதம்பரம், மாவட்டத் தலைவர், AIPRPA, சுவாமிநாதன், AIBDPA கூட்டு தலைமையேற்றனர். வந்திருந்தவர்களை தோழர். S.சுந்தரராமன் , மாவட்டச் செயலர் AIPRPA, வரவேற்றார். கருத்தரங்கத்தின் நோக்கத்தை விளக்கி தோழர். B. ஜோதி சுதந்திரநாதன், மாவட்டச் செயலர், AIBDPA பேசினார். 

AIBDPA மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன், AIBDPA மாநில அமைப்புச் செயலர் C. ஞானசேகரன். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் A.பெருமாள், BSNLEU மாவட்டச்செயலர் A. தங்கவேல், சிவராமன் , தோழர் S. தயாநிதி, விவசாயச் சங்கம், உட்பட மற்றும் பல தோழர்கள் கருத்தரங்கத்தை வாழ்த்தி பேசினர்.

        தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் தோழர். ஆதவன் தீட்சண்யா ” அம்பேத்காரும் இன்றைய சமுதாயமும் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

            நிறைவாக AIBDPA மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 

Leave a Reply