BSNLEU அலுவலக தாக்குதலைக் கண்டித்து 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் BSNLEU அலுவலகம் மீது தாக்குதல்

திரிணாமுல் குண்டர்கள் அராஜகம்.

           கடந்த 19-08-2016 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க BSNLEU மாநில அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திரிணமுல் கட்சியினரைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் 24-08-2016ல் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட BSNLEU மத்தியசங்கம் அறைக்கூவல் விட்டுள்ளது.

         AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன், AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி பெருவாரியான ஓய்வூதியர் தோழர்களை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

Leave a Reply