வெற்றிகரமாக நடைபெற்ற ஆதரவு இயக்கங்கள்.

தமிழகமெங்கும் மத்திய அரசு ஊழியர்களின்  வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வெற்றிகரமாக நடைபெற்ற ஆதரவு இயக்கங்கள்.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர். CKN உரையாற்றுகிறார்.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர். ராகவேந்திரா உரையாற்றுகிறார்..

         சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இன்று மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர்  சங்கங்களும் ஆதரவு இயக்கங்கள் நடத்தின.  AIBDPA, AIPRPA சங்கத்தலைவர்களும் பெருவாரியாக கலந்துகொண்டனர்.

         சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர்  சங்க கூட்டமைப்பு சென்னை மாவட்டச்செயலர் தோழர். N. கிருஷ்ணமூர்த்தி தலைமை    தாங்கினார். AIPRPA பொதுச்செயலர்தோழர்.K.ராகவேந்திரா ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். AIBDPA மாநிலச் செயலர் தோழர்.C.K. நரசிம்மன், மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலர் தோழர். S.ஜெகதீசன், AIPRPA மாநிலத் தலைவர் தோழர். M.கன்னையன், அனைத்து ஓய்வூதியர் சங்கத் தோழர். ஜோதி உட்பட பல தலைவர்கள் போராட்டத்தை விளக்கி பேசினர்.

                 தமிழ்நாட்டிலுள்ள சென்னை, வேலூர், ஈரோடு, கோவை, குன்னூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி,  மதுரை, புதுச்சேரி, கும்பக்கோணம்  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்  AIBDPA தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டதோடு  AIBDPA மாவட்டச்செயலர்கள் வேலைநிறுத்தத்தை வாழ்த்தி பேசினர்.

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

Leave a Reply