விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம்.

Jpeg

Jpeg

 

விருதுநகர் மாவட்ட AIBDPA சங்க சிறப்புக்கூட்டம் இன்று 25-03-2017ல் மாவட்டத்தலைவர் தோழர். S.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி வரவேற்றதோடு செயல்பாட்டறிக்கையும் சமர்பித்தார். வரவுசெலவு கணக்கை மாவட்டப்பொருளாளர். தோழர். M. பெருமாள்சாமி தாக்கல் செய்தார். ஏகமனதாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

     சிறப்புக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தனது சிறப்புரையில் சிறப்பாக நடைபெற்ற 4வது மாநிலமாநாட்டை நடத்திய விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களையும்  பாராட்டியதோடு மைசூரில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி கூறினார். மேலும்  மத்திய செயற்குழு அறிவித்துள்ள இயக்கங்களை விளக்கி கூறியதோடு இந்த மாவட்டத்தில் அதனை அமுல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  நிறைவாக தோழர். புளுகாண்டி நன்றி கூற சிறப்புக்கூட்டம் நிறைவுபெற்றது. 

Leave a Reply