சென்னையில் சிஐடியு மாபெரும் பேரணி – கோட்டை முற்றுகை

சென்னையில் சிஐடியு மாபெரும் முற்றுகை

சென்னை, ஏப். 4 – 2017.

உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.

1) ஒப்பந்த முறையை ஒழித்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

2) குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்,

3) தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தைநிறைவேற்ற வேண்டும்,

4) தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை கைவிட்டு காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

5) முறைசாரா நலவாரியங்களை முறைப்படுத்த வேண்டும்,

6) குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்,

7) மோட்டார் வாகன கட்டண உயர்வுகளை குறைத்திட வேண்டும்,

8) பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும்,

9) வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,

10) பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாயன்று (ஏப்.4) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இருந்து துவங்கிய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப்பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே.திருச்செல்வன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர்.

தலைமைச் செயலருடன் சந்திப்பு

சிந்தாதிரிப்பேட்டை அருகே காவலர்கள் பேரணியை தடுத்து நிறுத்தினர். சங்கத் தலைவர்கள் 8 பேரைதலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். அங்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து மனு அளித்தனர்.

 

Leave a Reply