உற்சாகமாக நடைபெற்ற புதுவை மாவட்ட சிறப்புக்கூட்டம்

     

    புதுவை மாவட்ட சிறப்புக்கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் தோழர். சிவக்குமார் தலைமையில் 15.04.2017 அன்று புதுச்சேரியில் வைத்து நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். சக்திவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர். பாலசுப்பிரமணியன் அஞ்சலிஉரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட துணைத்தலைவர் தோழர். கொளஞ்சியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநிலச்செயலர் தோழர். C.K.நரசிம்மன் சிறப்புரைஆற்றினார். தனது சிறப்புரையில் 78.2 சத பஞ்சப்படி இணைப்பு, 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் சாதகபாதகங்கள், மைசூரு மத்தியச்செயற்குழு முடிவுகள், 1.1.2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு 3வது சம்பள நிர்ணய அடிப்படையில் ஓய்வூதியம்,  நிர்வாகம்  அறிவித்துள்ள மருத்துவப்படி, இரவுநேர இலவச தொலைபேசி அழைப்பு வசதி இவற்றைபெற நாம்நடத்திய போராட்டங்கள்   என அனைத்தையும்   விளக்கி பேசினார்.

         முன்னதாக தகவல் அறிவிப்பு பலகை (Notice Board) திறந்து வைக்கப்பட்டது. 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்ட முடிவில் தோழர். மதியழகன் நன்றி கூறினார். 

Leave a Reply