சிறப்பான வேலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

சபாஷ்  வேலூர் மாவட்டம்

மத்திய சங்கம் நிர்ணயித்த 78.2சத IDA   நிலுவைத்தொகை நிதியில் 60சத பங்களிப்பான ரூபாய் 60000/-ஐ மத்திய மாநிலச் சங்கங்களுக்கு முதலில் வழங்கிய மாவட்டம்.

மத்திய சங்கம் நிர்ணயித்த 78.2சத IDA நிலுவைத்தொகை நிதியில் 60சத பங்களிப்பான ரூபாய் 60000/-ஐ மத்திய மாநிலச் சங்கங்களுக்கு முதலில் வழங்கிய மாவட்டம்.

           25-07-2017 அன்று வேலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர்.V.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். SNEA மாவட்டத்தலைவர் தோழர். P. லோகநாதன், மாநில உதவிச் செயலர் தோழர். C. ஞானசேகரன், மாநில அமைப்புச் செயலர் தோழர். K. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுக்குழுவில் வாழ்த்துரை வழங்கினர்.

   மாநிலச்செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் மத்திய சங்கம் நிர்ணயித்த 78.2சத IDA   நிலுவைத்தொகை நிதியில் 60 சத பங்களிப்பான ரூபாய் 60000/-ஐ மத்திய மாநிலச் சங்கங்களுக்கு முதலில் வழங்கிய வேலூர் மாவட்டத்தை நன்றி கூறி  பாராட்டினார்.   மேலும் 27.07.2017ல் BSNLEU உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஊதிய உயர்வு / ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை சக்திமிக்கதாக நடத்திட முழு ஆதரவு வழங்கிட வேண்டுகோள் விடுத்தார். மேலும்  நடைபெற்ற மத்திய மாநிலச் சங்க பணிகளையும் தஞ்சையில் நடைபெற்ற அதாலத் மற்றும் இன்றைய அரசியல் சூழல்களையும் விளக்கி கூறினார். 150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்ட பொதுக்குழுவில் நிறைவாக தோழியர். K. நாகம்மாள் நன்றி கூறிமுடித்து வைத்தார்.

Leave a Reply