BSNLலில் 27.07.2017ல் நடைபெற்ற வேலை நிறுத்தம் வெற்றி !

வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்கிட ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

 

1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி….. !

      உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து BSNL ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம், தார்ணாவை தொடர்ந்து 27.07.2017ல் ஒரு நாள் வேலைநிறுத்தம்   நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

  அஸ்ஸாமில் 400க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை மற்றும் துணை ராணுவத்தைக்கொண்டு கைது செய்த NE I Gm செயல் கண்டிக்கத்தக்கது. K G போஸ்கோட்டையாக உள்ள கொல்கத்தாவில் சங்கத்தை கட்டமுடியாத திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் நமது BSNLEU மாநிலச்செயலர் & BSNLCCWF SG தோழர். மித்ரா உள்ளிட்ட தோழர்களை தாக்கி காயப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களையும் மீறி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது பாராட்டிற்குரியது.

        நமது மத்தியச்சங்கம் விடுத்த அறைகூவலின்படி நாடு முழுவதும் நமது AIBDPA தோழர்கள் பெருவாரியாக இந்த போராட்டங்களில் கலந்து கொண்டது சிறப்பானது. ஆர்ப்பாட்டம், தார்ணா மற்றும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட அனைத்து தோழர்களையும் நமது மத்தியச்சங்கம் / மாநிலச்சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

        வேலைநிறுத்தத்திற்கு  ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்ட காட்சிகள்.

சென்னை CGM அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

Leave a Reply