வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்ட மாநாடு.

19-04-2015 AIBDPA வேலூர் மாவட்ட 2வது மாநாடு.

              விண்ணைமுட்டும் கோஷங்களுக்கிடையே சங்கக்கொடியை ஏற்றிவைத்து, வீரம் செரிந்த வேலூரில் AIBDPA வேலூர் மாவட்ட 2வது மாநாடு துவங்கியது.

              தோழர். E.ஏழுமலை தலைமையில் துவங்கிய மாநாட்டில் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன்  வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

          அகில இந்திய துணைத்தலைவர் தோழர்.M.மோகன்தாஸ் துவக்க உரை நிகழ்த்திட, விரிவான சிறப்புரையை மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் ஆற்றினார். 

            ஈரோடு மாவட்டச்செயலர் தோழர். N.குப்புசாமி, அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K.ஆறுமுகம், மாநில அமைப்புச் செயலர் தோழர். C.ஞானசேகரன், வங்கி, காப்பீடு, தபால், மாநில ஓய்வூதியர் சங்கத்தலைவர்கள், BSNLEU மாவட்டச் செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

        200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் மாவட்டத் தலைவராக தோழர். V.ஏழுமலையும், மாவட்டச் செயலராக தோழர். B.ஜோதி சுதந்திரநாதனும், மாவட்டப் பொருளாளராக தோழர். P.ஸ்ரீதரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

   சிறப்பாக நடைபெற்ற வேலூர் மாவட்ட மாநாட்டையும், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

Leave a Reply