ஈரோட்டில் AIBDPA அமைப்பு தின கருத்தரங்கம்

ஈரோட்டில் உற்சாகமாய் நடைபெற்ற AIBDPA அமைப்பு தின கருத்தரங்கம்.

           AIBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு 22.10.2017 அன்று ஈரோட்டில் உள்ள சர்வேயர் சங்க கட்டிடத்தில் வைத்து சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தோழர். C.K. நரசிம்மன் சங்கக்கொடியை தோழர்களின் உற்சாக கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தார்.

 .  இந்த சிறப்பு கருத்தரங்கில் மாநில செயலாளர் தோழர். C. K.நரசிம்மன் அவர்களும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில செயலாளர் தோழர். செ. நடேசன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

     AIBDPA மாநில துணை செயலாளர்  தோழர். N. குப்புசாமி ,  மாநில அமைப்பு செயலாளர் தோழர். N
சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

     100 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்திய ஈரோடு மாவட்டச்சங்கத்தை மாநிலச்சங்கம் பாராட்டுகிறது.

Leave a Reply