சென்னை மாவட்ட AIBDPA அமைப்பு தின கூட்டம்.

சென்னையில் உற்சாகமாய் நடைபெற்ற AIBDPA மாவட்ட அமைப்பு தினக் கூட்டம்.

 

         AIBDPA அமைப்பு தினத்தை முன்னிட்டு 25.10.2017 அன்று சென்னையில் உள்ள சங்க கட்டிடத்தில் வைத்து சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.

                 மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம், தோழர்கள் K. சின்னதுரை, A.V. வெங்கடேசன், V. சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.

     நிறைவாக மாநில செயலாளர் தோழர். C. K. நரசிம்மன் சங்க அமைப்புதின சிறப்புகளையும், மத்திய மாநிலச் சங்கங்களின் சிறப்பான போராட்டங்களால் பெற்ற சலுகைகளையும் இன்றைய மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் படும் துயரங்களையும் குறிப்பாக ஓய்வூதியர்களின் சிரமங்களையும் தனது   சிறப்புரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

       ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து BSNL ஊழியர் & அதிகாரிகள் சங்கங்கள் நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டம் வரும் 15.11.2017 நடைபெற இருப்பதால் அதில் நமது தோழர்கள் பெருவாரியாக கலந்து கொள்வது என்றும், CCA அலுவலகத்தில் 78.2சத பஞ்சப்படி இணைப்பு நிலுவைத்தொகை பணியில் எந்தவித கூடுதல் ஊதியமும்பெறாமல் இலவசமாக பணிசெய்த நமது சங்கத் தோழர்கள். பத்மாவதி, N. சாய்ராம் ஆகியோரை பாராட்டியதோடு நினைவுப் பரிசு வழங்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  

 

Leave a Reply