AIBDPA முதல் பொருளாளர் தோழர். M.L.திவாரி மறைவு.

AIBDPA முதல் பொருளாளர் தோழர். M.L.திவாரி மறைவு.

        புதுடெல்லி NTR பகுதியில் நீண்ட காலமாக பணியாற்றிய தோழர். M.L. திவாரி AITEU -CL-III(N) மற்றும் BSNLEU சங்கப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தோழர். தனது பணி ஓய்விற்குபின் 2005 முதல் 2013 வரை BSNLEU மத்தியச்சங்கப் பணியை திறம்பட செய்தவர் தோழர். M.L. திவாரி. AIBDPA துவக்க காலம் முதல் கண்ணூர் மாநாடு வரை மத்தியச்சங்கப் பொருளாளராகவும், நமது சங்க ஆலோசகர் தோழர்.V.A.N. நம்பூதிரியுடனும், பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜுடனும் இணைந்து நெருக்கமாக பணியாற்றிய தோழர். M.L. திவாரியின் மறைவுச் செய்தி கேட்டு வருந்துகிறோம்.

     அவரின் மறைவிற்கு AIBDPA சங்க கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதோடு அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

Leave a Reply