தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்ற தார்ணா போராட்டம் !

தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்ற தார்ணா போராட்டம்.

   ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நாடெங்கிலும் இன்று சிறப்பாக நடைபெற்ற தார்ணா தமிழகமெங்கும் உற்சாகமாக நடைபெற்றது. சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுகிறது.

       தமிழ்நாடு மாநிலச்சங்கம் (சென்னை மாவட்டம்) சார்பில் சென்னை CGM அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் தோழர். அப்துல்பாரி தலைமையில் தார்ணா நடைபெற்றது. வரவேற்புரை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம். போராட்டத்தை விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் பேசினார். CGM அலுவலக BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.D. ராமலிங்கம், தோழர்கள் சுவாமி குருநாதன், சின்னதுரை ஆகியோர் போரட்டத்தை வாழ்த்தி பேசினர். BSNLEU துணைப்பொதுச் செயலரும் தமிழ்மாநில தலைவருமான தோழர். S. செல்லப்பா தார்ணாவை நிறைவு செய்து நிறைவுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் தோழர். சாயிராமன் நன்றி கூறினார்.

 ஈரோடு மாவட்டம்.

       ஈரோட்டில் நடைபெற்ற தர்ணா போராட்டம் ஈரோடு பொது மேலாளர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட தலைவர் தோழர் A.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தோழர் அய்யாசாமி துவக்கி வைத்தார். தர்ணா போராட்டத்தை தோழர். P. சின்னசாமி மாவட்ட செயலாளர் அவர்கள் துவக்கி வைத்தார். போராட்டத்தை ஆதரித்து தோழர் N.துரைசாமி மின்சார வாரிய ஓய்வூதியர் சங்கம், தோழர் K.பாலகிருஷ்ணன் தமிழக அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், தோழர் குப்புசாமி மாநில துணை செயலாளர்,  AIBDPA, தோழர் L.பரமேஸ்வரன் மாவட்ட செயலாளர் BSNLEU ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட பொறுப்பு செயலாளர் K.R.குமார், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலாளர், மற்றும் தோழியர் கள் எனபெருந்திரளாக கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். 

கோவை மாவட்டம்

கோவை மாவட்ட தார்ணா கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர். உமாபதி தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P.B.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நெல்லை மாவட்டம்

    AIBDPA அகில இந்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையில் இன்று 11.12.17 மாலை 02.00 மணியளவில் நெல்லை தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம், மாவட்ட தலைவர் தோழர் ச. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் D.கோபாலன் பேசினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர். கிருஷ்ணன், தோழர். முத்தையா, தோழர். சந்திரபோஸ், தோழர். குமரேசன், தோழர். தங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி, மாவட்ட தலைவர் தோழர் S.ராஜகோபால், மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள். மாவட்ட உதவி செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். சுமார் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம்

AIBDPA தூத்துக்குடி மாவட்ட சங்கம் சார்பில் தூடி GM அலுவலகத்தில் வைத்து 11.12.2017 அன்று மாவட்டத் தலைவர் தோழர். T.சுப்பிரமணியன் தலைமையில் தார்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பேசினார். போராட்டத்தை வாழ்த்தி BSNLEU மாநில உதவிச்செயலர் தோழர். R.M.கிறிஸ்டோபர், BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M. ஜெயமுருகன், ஓய்வூபெற்ற பள்ளிகல்லூரி ஆசிரியர் சங்க மாநில பொருளார் தோழர். E. முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தார்ணாவை நிறைவு செய்து மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார்.

புதுச்சேரி மாவட்டம்:

    பாண்டிசேரி மாவட்ட தர்ணா மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் தோழர். கே. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி தோழர் வி. ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். போராட்டத்தை வாழ்த்தி தோழர். என். கொளஞ்சியப்பன், மா. உ. தலைவர். BSNLEU, தோழர். சுப்ரமணியம், மாவட்டச்செயலர், BSNLEU, தோழர். சண்முகசுந்தரம். JIPMER சங்கம், பேசினர்.பாண்டி மாவட்டச்செயலர் தோழர். பி. சக்தி வேல் நன்றி உரையாற்றினார்.

சேலம் மாவட்டம் நாமக்கல்

மதுரை மாவட்டம் திண்டுக்கல்.

   மதுரை மாவட்டம் திண்டுக்கல்லில் கிளைத்தலைவர் தோழர். K. கனகராஜ் தலைமையில் 11.12.2017 அன்று தார்ணா நடைபெற்றது. தார்ணா போராட்டத்தை விளக்கி கிளைத்தலைவர் தோழர். S. ஜாண் போர்ஜியா பேசினார். போராட்டத்தை வாழ்த்தி BSNLEU மாவட்ட உதவிப் பொருளாளர் தோழர். R.அய்யனார்சாமி, மாவட்ட துணைத்தலைவர் தோழர். வைத்தியலிங்கபூபதி, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். A. குருசாமி ஆகியோர் பேசினர். தோழர். S.அழகர்சாமி நன்றி கூறி தார்ணாவை நிறைவு செய்தார்.

திருச்சி மாவட்டம்:

          திருச்சி மாவட்டம் AIBDPA தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். ஜான்பாசா தார்ணாவை துவக்கிவைத்து போராட்டத்தை விளக்கி உரையாற்றினார்.   தோழர். சீராஜூதீன் அகில இந்திய ஓய்திவூயர் சங்கம், திருச்சி பாலகிருஷ்ணன் TNSF மாநில செயலாளர், செல்வம் AIBDPA திருச்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 30க்கும மேற்பட்ட ஓய்திவூயர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply