உற்சாகமாக நடைபெற்ற வேலூர் 3வது மாவட்ட மாநாடு.

உற்சாகமாக நடைபெற்ற வேலூர் 3வது மாவட்ட மாநாடு.

   

 

 

      19-12- 2017 செவ்வாய் கிழமை அன்று வேலூர் K. M. நாதன் மஹாலில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமையில் வேலூர் 3வது மாவட்ட மாநாடு உற்சாகமாக நடைபெற்றது. தோழர். R.பழனிச்சாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை ஆற்றினார். 

               மாநிலச் செயலர் C.K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார். AIBDPA அகில இந்திய சங்க ஆலோசகர்  தோழர். V.A.N. நம்பூதிரி, AIBDPA மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

        வேலூர்  BSNL முதன்மை பொது மேலாளர் திரு. K. வெங்கட்ராமன் மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

          மாவட்டத் தலைவராக தோழர். V. ஏழுமலை, மாவட்டச் செயலராக தோழர். B.ஜோதி சுதந்திரநாதன், மாவட்டப் பொருளாளராக தோழர். ஸ்ரீதரன் ஆகியோர் ஏகமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply