புதிய சரித்திரம் படைத்த டெல்லி பேரணி

BSNL ALL UNIONS / ASSONS அனைத்து சங்கங்களும் நடத்திய வரலாற்று சிறப்பான சஞ்சார் பவனை நோக்கிய பேரணி.

    23.02.2018 BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக அதிகாரிகள் ஊழியர்கள் பல்லாயிரக்கணக்காக கலந்து கொண்ட பேரணி – வரலாற்று சிறப்பாக சஞ்சார்பவனை நோக்கி நடைபெற்றது. ஜன்பத் கிழக்கு கோர்ட்டில் தொடங்கிய பேரணி டால்டாயிஸ் மார்க் பார்லிமென்ட் தெரு வழியாக பார்லிமென்ட் தெரு காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது. 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி முடிவில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

            கூட்டமைப்புச் சங்கங்களின் தலைவர்கள் தோழர். P. அபிமன்யு GS, BSNLEU, தோழர். சந்தேஷ்வர் சிங், GS, NFTE, தோழர். K. செபாஸ்டின், GS, SNEA, தோழர். பிரகலாத் ராய்,  GS,  AIBSNLEA, தோழர். ஜெயபிரகாஷ், GS, FNTO, தோழர்.  N. D. ராம், GS, SEWA BSNL, தோழர். ரவி சில் வர்மா, GS, AIGETOA, தோழர். மல்லிகார்ஜூனா தலைவர், BSNL MS, தோழர்.  S. D. சர்மா, GS, BSNL ATM, வெட்ரன் தலைவர்கள் தோழர். V.A.N. நம்பூதிரி, தோழர். G.L. ஜோகி ஆகியோர்  எழுச்சி மிக்க உரை நிகழ்த்தினர். கோரிக்கைகளில் தீர்வில்லை என்றால்  போராட்டம் தொடரும் என்றும் அனைவரும் பெருவாரியாக கலந்து கொள்ளவும் தலைவர்கள் கண்டன உரையில் தெரிவித்தனர்.

                      மத்திய தொழிற் சங்க தலைவர்கள் தோழர்கள். தபன்சென், MP, GS, CITU, வித்தியாசாகர் கிரி, செயலர், CITU, ஜில் சிங் INTUC, தலைவர் டெல்லி மாநிலத் தலைவர் ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  பேரணியில் கலந்துகொண்ட அனைவரையும் தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

Leave a Reply