ஓய்வூதிய மாற்றம் – தேவையற்ற விமர்சனங்கள்

“போராடாமல் பெற்றதில்லை – போராடி தோற்றதில்லை .” ஓய்வூதிய மாற்றம் பெற போராடிய சங்கங்களை பாராட்டுவோம் – தேவையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுவோம் !

       கடந்த 24.02.2018 அன்று ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக AUAB பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களை – மனதளவில் ஏற்காமல் – சில ஓய்வூதிய சங்கத் தோழர்கள் தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பது வருத்தம் அளிக்கிறது.

            All Unions / Associtions of BSNL போராட்டங்கள் பணியில் உள்ள 1.85 லட்சம் ஊழியர்களுக்கானது மட்டும் அல்ல. பணி ஓய்வு பெற்ற 2 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது. கடந்த 2015 ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளில் நடத்திய வீரம் செரிந்த வேலைநிறுத்தமே 60:40 என்ற வரைமுறை அரசால் கைவிடப்பட காரணமாக அமைந்தது. இதன்மூலம் BSNL ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய அளவீடுகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டது.

     ஊதிய மாற்றம் செய்தபின் 01.01.2017 முதல் வழங்கவேண்டிய ஓய்வூதிய மாற்றம் வழங்குவது என்ற நிலை நிர்வாகத்திடம் இருந்து வந்தது. இது DOT கடித எண் no. 24 – 1 /2018 தேதி 21.02.2018 ல் சொல்லப்பட்டது. ஆனால் 24.02.2018 அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. பல கட்ட போராட்டங்களை AUAB நடத்தியதோடு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையே ஓய்வூதியமாற்றம் செய்ய ஒத்துக்கொள்ளப்பட்டது.

          இந்த உடன்படிக்கையே சில ஓய்வூதிய சங்கத் தோழர்களை மனதளவில் இடையூறு செய்கிறது. இதுபோன்ற மாய்மால விமர்சனங்களை தவிர்ப்போம். 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் என்ற கோரிக்கையே All Unions  / Associtions of BSNL சங்ககூட்டமைப்பிற்கு கிடைத்த உடனடி வெற்றியாகும். அதே நேரத்தில் நிரந்தரமான ஓய்வூதிய கொள்கை அமைந்திட AUAB வழி செய்யும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. அதனால் இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்போம். ஓய்வூதியர்களுக்காக எந்த போராட்டமும் செய்யாமல் சாய்வு நாற்காலிகளில் சாய்ந்துகொண்டு விமர்சிப்பவர்களை புறம் தள்ளுவோம். “போராட்டங்கள் தோற்றதில்லை.  போராடாமல் பெற்றதில்லை.”

   2வது ஓய்வூதியமாற்றம், 78.2 சத நிலுவைத்தொகை, காலாண்டு மருத்துவப்படி, இலவச தொலைபேசி அழைப்பு வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பலகட்ட போராட்டங்களை AIBDPA தனித்தும் BSNLEUவுடன் இணைந்தும் நடத்தி வெற்றி கண்டுள்ளன. என்றென்றும் நம்மோடு போராடி உரிமைகளை பெற்றுத்தரும் BSNLEU கூட்டணிச் சங்கங்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுகளும்.

            AIBDPA மாவட்டச் செயலர்கள் தங்கள் பகுதியில் மாவட்டபொதுக்குழு, செயற்குழு, பகுதிகுழுக் கூட்டங்கள் நடத்தி மேற்க்கண்ட தகவல்களை ஓய்வூதியர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

Leave a Reply