AUAB நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு AIBDPA நாடு தழுவிய ஆதரவு.

துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL – நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு AIBDPA நாடு தழுவிய ஆதரவு.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை AUAB எதிர்த்து வருகின்றது. BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLலின்  டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLலின் உயிர் மூச்சு அதன் டவர்கள் தான். அந்த டவர்கள் BSNLலிடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. தனி நிறுவனமாகவே செயல்படும். இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. ஏமாற்று வேலை.

    எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று அனைத்து கிளைகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. இந்த போராட்டத்தின் உண்மை நிலையை கருத்தில் கொண்டு AIBDPA மத்திய மாநிலச்சங்கம் ஓய்வூதியர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிட வேண்டுகிறது. அனைத்து மாவட்டச்சங்க செயலர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

Leave a Reply