பாண்டியில் AIBDPA மாவட்டச் சிறப்புக் கூட்டம்.

பாண்டிச்சேரியில் AIBDPA ஓய்வூதியர் சிறப்புக் கூட்டம்.

      23-06-2015 அன்று  AIBDPA பாண்டிச்சேரி மாவட்ட ஓய்வூதியர்களின் சிறப்புக் கூட்டம் பாண்டி மாவட்டத் தலைவர் தோழர். K. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். M. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

           மாநிலச் செயலர் தனது உரையில் நடைபெற்ற மத்திய, மாநிலச் சங்க செயற்குழு முடிவுகள்,  78.2 சத பஞ்சப்படி பிரச்சனையின் உண்மை நிலை, 2015 ஜூலை 21 & 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் உண்ணாவிரதம் மற்றும் இன்றைய அரசியல் விஷயம் என அனைத்து விபரங்களையும் விவரித்ததோடு புதிய  உறுப்பினர் சேர்க்கைக்கான திட்டமிடுதலையும் நயம்பட எடுத்துரைத்தார்.

           CITU மாவட்ட உதவித் தலைவரும் AIBDPA உறுப்பினருமான தோழர். K. முருகன் தனது உரையில் 2015 செப்டம்பர் 2ல் மத்திய சங்கங்களால் திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் அதனை பாண்டியில் வெற்றிகரமாக்கிட செய்ய வேண்டிய பணிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

      BSNLEU  மாவட்டச் செயலர் தோழர். A. சுப்பிரமணியன், BSNLEU மாவட்ட உதவித் தலைவர் தோழர். கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். S. கோவிந்தராஜ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Leave a Reply