FORUM தலைவர்களுக்கு நன்றி

ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவு கோப்புகளை விரைந்து செயல்படுத்திட  DOT செயலரைக் கேட்டுக்கொண்ட FORUM தலைவர்களுக்கு நன்றி.

                     16-07-2015ல் DOT செயலர் திரு. ராகேஷ் கார்க் அவர்களை சந்தித்த FORUM தலைவர்கள் ஓய்வூதியர்களுக்கான 78.2சத பஞ்சப்படி இணைப்பு சம்பந்தமாக அமைச்சரவையின் குறிப்பு குறித்த கருத்துக்களை செலவினத்துறை (Department of Expenditure) இதுவரை தெரிவிக்க வில்லை என்பதை DOT செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு செலவினத்துறை செயலருக்கு கடிதம் எழுதி விரைவுபடுத்த வேண்டினர். 

                DOT செயலரும் மெம்பர் நிதியை உடனடியாக கடிதம் எழுதவும், அமைச்சரவைக்கு இது குறித்த குறிப்பு அனுப்பிட ஏற்பாடு செய்தமைக்கு AIBDPA மாநிலச் சங்கம் FORUM தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறது.

Leave a Reply