• மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு கூட்டம்

  மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு கூட்டம்.

        07-02-2018 காலை 11மணி அளவில் மதுரை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மாவட்ட உதவித்தலைவர் தோழர். K. ஜாண் போர்ஜியா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். A. ஆதீஸ்வரன் அஞ்சலி உரையாற்றினார். பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர். மேனுவல் பால்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச்செயலர் தோழர் M. செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

          நிறைவாக மாநில அளவில் தீரக்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் அதில் தீர்விற்க்கான வழிகளையும் விரிவாக விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மேலும் இன்றைய அரசியல் சூழல், பட்ஜெட் 2018ல் பாதக அம்சங்கள், ஓய்வூதியமாற்ற பிரச்சனையில் நமது பங்களிப்பும்  அதற்காக நடைபெற்ற போராட்டங்களையும் விளக்கி பேசினார்.

     மாவட்ட மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை  மாவட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.  செயற்குழுவில் கிளைகளை அமைப்பது எனவும் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது என்றும்  முடிவு செய்யப்பட்டது. மேலும் 2018 ஏப்ரல் முதல் அல்லது 2வது வாரத்தில் மாவட்ட மாநாட்டையும், தமிழ் மாநில செயற்குழுவையும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 • உற்சாகமாய் நடைபெற்ற கோவை முப்பெரும் விழா

  கோவையில் சிறப்பாக நடைபெற்ற  கொடிக்கம்பம் அமைப்பு, தகவல் பலகை திறப்பு, பொதுக்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா 

                 கோவையில் கொடிக்கம்பம் அமைப்பு, தகவல் பலகை திறப்பு, பொதுக்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா இன்று 06.02.2018 சிறப்பாக நடைபெற்றது.

              நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக கோவை GM அலுவலக நுழைவு வாசலில் புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் சங்கக் கொடியினை கோவை  மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியை வாழ்த்தி BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

        பின்னர் நடைபெற்ற சங்க தகவல் பலகையை மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் திறந்து வைத்தார்.

       அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டச் செயற்குழு தோழர். K. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு மாவட்ட மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை விரிவாக கூறினார். தோழர். குடியரசு அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.  செயற்குழுவில் கிளைகளை அமைப்பது எனவும் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது என்றும் மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் உடல்நலம் கருதி மாவட்ட பொறுப்பு செயலராக தோழர். V. வெங்கட்ராமன்செயல்படுவது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. நிறைவாக மாநில அளவில் தீரக்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் அதில் தீர்விற்க்கான வழிகளையும் விரிவாக விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார்.

             அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட  சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தோழர். L. உமாபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர்கள் தோழர். N. குப்புசாமி,  தோழர்.  பங்கஜவல்லி வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். 2017ல்   நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் வழங்கப்படாததால் அதனை வழங்கிடக்கோரி தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் அதில் ஓய்வூதியர்களின் பங்களிப்பு, இன்றைய அரசியல் நிலைமைகள், பட்ஜெட் – 2018 உள்ளிட்ட பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தார். கூட்ட முடிவில் தோழர். குடியரசு நன்றி கூறினார்.

       முன்னதாக 2017 நவம்பர் 9,10,11 தேதிகளில் மத்தியச் சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெற்ற தார்ணாவில் கோவை மாவட்ட 9 தோழர்கள் தங்கள் சொந்த செலவில் கலந்து கொண்டதை பாராட்டி அந்த தோழர்களுக்கு மாநிலச் சங்க நில்வாகிகளால் சால்வை அணிவிக்கப்பட்டது. 

 • வெற்றிகரமாக BSNLலில் நடைபெற்ற “சத்தியாகிரகம்”

  தார்மீக ஆதரவளித்து கலந்துகொண்ட AIBDPA தோழர்களுக்கும் மாவட்டச் செயலர்களுக்கும் வாழ்த்துக்கள் !

  கோரிக்கைகள்:-

  A) 1.1.2017 முதல் 3வது சம்பள உயர்வை 15 சத ஊதிய மாற்றத்தோடு வழங்கிடு !

  B) ஓய்வூதியர்களின்  ஓய்வூதிய மாற்றக் கோரிக்கையை நிறைவேற்று !!

  C) 2வது சம்பள உயர்வில் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !!!

  D) துணை டவர் கம்பேனி அமைக்கும்திட்டத்தை கைவிடு !!!!

  E) ஓய்வுபெறும் வயதை 60வதிலிருந்து 58டாக குறைக்காதே !!!  

            மேற்கண்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து BSNL தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 30.01.2018 முதல் 03.02.2018 வரை  நடத்திய 5 நாள்  “சத்தியாகிரக” போராட்டம் சிறப்பாக நாடு முழுவதும் நடைபெற்றது. நமது மத்திய மாநிலச் சங்கங்களின் வேண்டுகோளின்படி AIBDPA தோழர்கள் நாடு முழுவதும் சிறப்பாக கலந்து கொண்டனர்.

                  மேற்படி போராட்டத்தில் ஆதரவளித்து கலந்து கொண்ட AIBDPA தோழர்களுக்கும் விரிவான ஏற்பாடு செய்த அனைத்து மாவட்டச் செயலர்களையும் தமிழ் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டி வாழ்த்துகிறது. 

 • ஆம்பூர் கிளை (வேலூர் மாவட்டம்) உதயம்

  மாநிலச் செயலர் கலந்துகொண்டு புதிய கிளையையும் நிர்வாகிகளையும் வாழ்த்தி துவக்கி வைத்தார்.

             கடந்த 01.02.2018 அன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் புதிய AIBDPA கிளைச் சங்கம் உற்சாகமாக துவக்கப்பட்டது. கிளை துவக்க நிகழ்ச்சியில் முன்னதாக கொடியேற்றம் நடைபெற்றது. தேசியக் கொடியை மூத்த தோழர். கிருஷ்ணனும், AIBDPA சங்கக் கொடியை மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும், BSNLEU சங்கக் கொடியை ஆம்பூர் கிளைச்செயலரும் ஏற்றி வைத்தனர்.

          கிளை துவக்க நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமை ஏற்றார். தோழர். D. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் துவக்க உரை ஆற்றினார்.

           ஆம்பூர் புதிய AIBDPA கிளைச் சங்கத்தை துவக்கி வைத்தும், புதிய கிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்தும் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர். C. ஞானசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

        ஆம்பூர் புதிய AIBDPA கிளைச் சங்க நிர்வாகிகளாக தோழர். P. ராமு, SI, RTD கிளைத்தலைவர், தோழர். D. ராஜேந்திரன், STS RTD, கிளைச்செயலர், தோழர். வசந்தகுமார், STS RTD, கிளை பொருளாளர் என ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

         வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதி தோழர்கள் உட்பட பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்ட கிளைக்கூட்டத்தில் நிறைவாக தோழர். சந்திரகாந்தா நன்றி கூறினார். சிறப்பான ஏற்பாடுகளை செய்த வேலூர் மாவட்டச் சங்கத்தையும் புதிய கிளை தோழர்களையும் அதன் நிர்வாகிகளையும் தமிழ் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி  பாராட்டி வாழ்த்துகிறது . 

 • உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாத்திட BSNLலில் வெற்றிகரமாக நடைபெறும் தொடர் போராட்டங்கள்.

  நாடெங்கிலும் நடைபெறும் சத்தியாக்கிரக போராட்டத்தில் தார்மீக ஆதரவளித்து கலந்து கொண்ட AIBDPA தோழர்கள் !

  கோரிக்கைகள்:-

  A) 1.1.2017 முதல் 3வது சம்பள உயர்வை 15 சத ஊதிய மாற்றத்தோடு வழங்கிடு !

  B) ஓய்வூதியர்களின்  ஓய்வூதிய மாற்றக் கோரிக்கையை நிறைவேற்று !!

  C) 2வது சம்பள உயர்வில் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !!!

  D) துணை டவர் கம்பேனி அமைக்கும்திட்டத்தை கைவிடு !!!!

  E) ஓய்வுபெறும் வயதை 60வதிலிருந்து 58டாக குறைக்காதே !!!  

            மேற்கண்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து BSNL தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் “சத்தியாகிரக” போராட்டத்தில் AIBDPA தோழர்கள் நாடு முழுவதும் சிறப்பாக கலந்து கொண்டனர்.

                   தமிழ்நாடு CGM அலுவலக வளாகத்தில் தமிழ்மாநில சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் BSNLEU பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யு கலந்து கொண்டார். AIBDPA மாநிலச் செயலர் தோழர்.  C. K. நரசிம்மன் உட்பட 20க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

  ஈரோடு மாவட்டம்:-

  கோவை மாவட்டம் :

  கும்பக்கோணம் மாவட்டம் :-

  நாகர்கோவில் மாவட்டம்:-

 • தொடர் போராட்டங்களுக்கு தயாராகும் BSNL தொழிற்சங்கங்கள்

  BSNL தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவளித்து பங்களிக்க AIBDPA மத்திய, மாநிலச்சங்கங்கள் முடிவு.

       அனைத்து BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்கங்கள் கடந்த 08.01.2018ல் டெல்லியில் கூடி கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டங்களை நடத்திட முடிவு செய்துள்ளன.

  போராட்டங்கள் :-

  1) 30.01.2018 முதல் 5 நாட்கள் “சத்தியாக்கிரகம்”. டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் தலைவர்கள் பங்களிப்புடன் சிரதாஞ்சலி செய்ய முடிவு.

  2) 30.01.2018 முதல் விதிப்படி வேலை செய்வது.

  3) 23.02.2018ல் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டெல்லியில் ” சஞ்சார் பவனை” நோக்கி பேரணி நடத்துவது.

  கோரிக்கைகள்:-

  A) 1.1.2017 முதல் 3வது சம்பள உயர்வை 15 சத ஊதிய மாற்றத்தோடு வழங்கிடு !

  B) ஓய்வூதியர்களின்  ஓய்வூதிய மாற்றக் கோரிக்கையை நிறைவேற்று !!

  C) 2வது சம்பள உயர்வில் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !!!

  D) துணை டவர் கம்பேனி அமைக்கும்திட்டத்தை கைவிடு !!!!

  E) ஓய்வுபெறும் வயதை 60வதிலிருந்து 58டாக குறைக்காதே !!!  

        போராட்டத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கையை இணைத்து போராட முன்வந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை AIBDPA சங்கம் நன்றியுடன் பாராட்டுகிறது. மேலும் அனைத்து போராட்டங்களிலும் AIBDPA தோழர்கள் பங்கெடுக்க மத்திய மாநிலச் சங்கங்கள் வேண்டுகின்றன.

             AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது. டெல்லி பேரணியில் அண்டை மாநிலத் தோழர்கள் கலந்து கொள்வது என்ற ஆலோசனையை மத்தியச் சங்கம் தெரிவித்துள்ளது. 

   

   

   

 • குடியரசு தின வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் 69வது  குடியரசு தின வாழ்த்துக்கள் !

   

  தேசம் காக்கவும் தேச வளர்ச்சியிலும்

  பாடுபட்ட தலைவர்களை நேசம் கொள்ளும்

  அனைவருக்கும் இனிய குடியரசு தின

  நல்வாழ்த்துக்கள் !!!

 • அஞ்சல் அட்டை இயக்கம் ஜனவரி 2018 – 22 முதல் 29 வரை

  78.2 சத IDA நிலுவைத் தொகை பெறாத ஓய்வூதியர்களின் பிரச்சனையை கோரிக்கையாக்கி அஞ்சல் அட்டை இயக்கம் 2018 ஜனவரி  – 22 முதல் 29 வரை நடத்திட மாநிலச்சங்கம் அறைகூவல் !

     78.2 % IDA நிலுவைத்தொகை பெற்றிட அஞ்சல் அட்டை இயக்கம் நடத்திட மாவட்டச் செயலர்களுக்கு வேண்டுகோள் :-  

           Extra Increment பெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2% IDA நிலுவைத் தொகையை, DoT உத்தரவை சுட்டிக்காட்டி CCA நிர்வாகம் தமிழகத்தில் வழங்காமல் இருக்கிறது. இது குறித்து நமது மத்தியச் சங்கம்   25.10.2017ல் DoT செயலருக்கு கடிதம் எழுதி விவாதித்து உடனடியாக வழங்கிடக் கோரி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.  

                  தாமதத்தை சுட்டிக்காட்டியும் உடனடியாக வழங்கிடக் கோரியும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் 78.2% IDA  நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடக் கோரி DoT செயலருக்கு “அஞ்சல் அட்டை இயக்கம்”   நடத்துவதென மத்திய சங்கத்தின் ஆலோசனைப்படி முடிவெடுத்துள்ளது. 

          அஞ்சல் அட்டை இயக்கத்தை 2018 ஜனவரி 22 முதல் 29வரை நடத்தி முடிக்கவேண்டும் என மாநிலச் சங்கம் மாவட்டச் செயலர்களைக் கேட்டுக் கொள்கிறது.

            DOT செயலருக்கு எழுதிய கடிதத்தின் நகலை Principal CCA தமிழ்நாடு அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

  Address :

  To
  The Secretary
  Department of Telecommunications,
  Sanchar Bhavan,
  20, Ashoka Road,
  New Delhi – 110 001.

  Text :
  Respected madam,

            I am a BSNL pensioner entitled to get the 78.2% IDA fixation. Unfortunately the Principal CCA, Tamilnadu has not yet given it, unjustly delaying it, insisting it to deduct the extra increment already granted to me reported to be based on a letter from DoT..
        I request your kind intervention for early settlement.

  Thanking you,

  Yours faithfully,
  (NAME)
  (MEMBER, AIBDPA)
  (PPO NO.)

  நகல் அனுப்ப வேண்டிய முகவரி :
  Principal Controller of Communications and Accounts
  7th Floor, R.K. Nagar Telephone Exchange Building, 238, R K MUTT Road, Chennai – 600 028.

 • பொங்கல் வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

   

  தடைகள் தகர்ந்திட

  தலைகள் நிமிர்ந்திட

  நிலைகள் உயர்ந்திட

  அவலங்கள் அகன்றிட

  கனவுகள் மெய்ப்பட

  தை பிறந்தால் வழி பிறக்கும்  

  என்ற நம்பிக்கையுடன்

  மழை வளம் உயர !

  மனைவளம் பெருக !!

  அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய

  தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள் !!!

   

 • சென்னை CGM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  துணை டவர் நிறுவனத்திற்கு IAS அதிகாரி CMDயாக நியமித்ததை எதிர்த்து !

   

       துணை டவர் நிறுவனத்திற்கு CMD நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு 08.01.2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIBDPA தோழர்கள் மாநிலச் செயலர் தோழர். CKN தலைமையில் பங்களிப்பு.