• பொங்கல் வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

   

  தடைகள் தகர்ந்திட

  தலைகள் நிமிர்ந்திட

  நிலைகள் உயர்ந்திட

  அவலங்கள் அகன்றிட

  கனவுகள் மெய்ப்பட

  தை பிறந்தால் வழி பிறக்கும்  

  என்ற நம்பிக்கையுடன்

  மழை வளம் உயர !

  மனைவளம் பெருக !!

  அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய

  தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள் !!!

   

 • சென்னை CGM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  துணை டவர் நிறுவனத்திற்கு IAS அதிகாரி CMDயாக நியமித்ததை எதிர்த்து !

   

       துணை டவர் நிறுவனத்திற்கு CMD நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு 08.01.2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIBDPA தோழர்கள் மாநிலச் செயலர் தோழர். CKN தலைமையில் பங்களிப்பு. 

 • டவர்களை பாதுகாக்க 08.01.2018 BSNLலில் ஆர்ப்பாட்டம் – ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்போம் !

  டவர் கம்பேனிக்கு CMDஆக IAS அதிகாரியை   நியமனம் செய்ததை எதிர்த்து 08.01.2018 BSNLலில் மாபெரும் கண்டன   ஆர்ப்பாட்டம் .

                      BSNL டவர்களை பிரித்து தனி டவர் துணை கம்பேனி அமைக்கும் மத்திய பிஜேபி அரசின் முடிவை எதிர்த்து கடந்த 15.12.2016லும் 12&13.12.2017லும் சிறப்பான வேலைநிறுத்தத்தை நடத்தி தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தபோதிலும் ஊழியர்களின் கருத்தை மதிக்காமல் அடுத்த அதிர்ச்சி தகவலாக டவர் கம்பேனிக்கு CMDஆக புதிய IAS அதிகாரியை நியமனம் செய்துள்ளது மத்திய பிஜேபி அரசு. இதிலிருந்து டவர் கம்பேனியை நிர்வகிக்கும் பொறுப்பு  மத்திய அரசின் முழு அதிகாரத்தில் வர உள்ளதையே இது காண்பிக்கிறது. BSNL டவர்களை எடுத்து கொள்வதாகவே தெரிகிறது.

          அதனை எதிர்த்தும் BSNL டவர்களை பாதுகாக்கும் பொருட்டும் தமது முழு எதிர்ப்பை பதிவு செய்திட வரும் 08.01.2018ல் BSNLலில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விட்டுள்ளன.

            இந்த போராட்டத்தில் நமது AIBDPA சங்கத் தோழர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட மத்திய மாநில சங்கங்கள்ஆதரவளித்திட அறைகூவல் விட்டுள்ளன. அனைத்து மாவட்டச் செயலர்களும் உரிய நடவடிக்கை எடுத்து ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

 • தூத்துக்குடி மாவட்டம் பகுதி பொதுக்குழு கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதி சிறப்பு பொதுக்குழு  கூட்டம்.

  Jpeg

  Jpeg

       தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதி பொதுக்குழு சிறப்பு கூட்டம் 05.01.2018 அன்று கோவில்பட்டி தொலைபேசி நிலையத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

          மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அஞ்சலி உரை நிகழ்தியதோடு அனைவரையும் வரவேற்றார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில சங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக கூறினார். மேலும் வருங்காலங்களில் ஓய்வூதியத்தை பாதுகாக்க மாநில மத்தியச் சங்கங்கள் விடும் அறைகூவல்களை தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாக நடத்திடும் என்று உறுதி கூறினார்.

             AIBDPA மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில்  நமது போராட்டங்களிலும், BSNL தொழிற்சங்க போராட்டங்களிலும் கலந்து கொண்ட தோழர்களை பாராட்டியதோடு இன்றைய அரசியல் சூழலை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் 78.2 சத IDA நிலுவைத்தொகை பெறாத ஓய்வூதியர்களுக்காகவும், மருத்துவபடியினை பெறுவதற்கும் மத்திய மாநிலச் சங்கங்கள்  எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிப்   பேசினார். மேலும் ஓய்வூதியர்களின் தனி பிரச்சனைகள் மருத்துவ பில்களின் காலதாமதம் உள்ளிட்டவைகளை விளக்கினார். 

               கூட்ட முடிவில் மாவட்ட உதவிச் செயலர் தோழர் K. கந்தசாமி நன்றி கூறினார்.

 • புத்தாண்டு 2018 வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள் !

  மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் சங்க நிர்வாகிகள், அனைத்து ஓய்வூதியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

 • 01-01-2018 முதல் IDA 2.6 % உயர்வு.

  IDA உயர்வு

  01-01-2018 முதல் பஞ்சப்படி (IDA) 2.6 சதம் உயர்ந்து மொத்தம் 124.3+2.6 =126.9 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

   

   

 • தொழிற்சங்க இயக்க முன்னோடி தோழர். N. M. S மறைவு

  இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகத்தான தலைவர் தோழர். என். எம். சுந்தரம்  மறைவு.

          LICயை பொதுத்துறையில் பாதுகாத்திடும் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தியவரும், காப்பீட்டு ஊழியர்களின் தன்னிகரற்ற தலைவரும், தத்துவ வழிகாட்டியும், தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளரும், பொருளாதார மேதையுமான தோழர். N. M. சுந்தரம் (வயது80) கடந்த 26.12.2017ல் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் 29.12.2017 நடைபெற உள்ளது. அவர்தம் மறைவிற்கு நமது மாநிலச் சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

   தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

 • இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !

   அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !

 • சிறப்பாக நடைபெற்ற புதுச்சேரி மாவட்ட மாநாடு.

  AIBDPA 3வது புதுச்சேரி மாவட்ட மாநாடு.

   

   

   

            23-12-2017 சனிக் கிழமை அன்று புதுச்சேரி BSNLEU மாவட்ட சங்கக் கட்டடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. ஜெயராமன் தலைமையில் புதுச்சேரி 3வது மாவட்ட மாநாடு உற்சாகமாக நடைபெற்றது. முன்னதாக தேசியக் கொடியை தோழர். S. ஜெயராமனும், சங்கக் கொடியை மாநிலச் செயலர் C. K. நரசிம்மனும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.தோழர்.  M. பாலசுப்பிரமணியன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலர் தோழர். P. சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.

                 மாநிலச் செயலர் தோழர்.  C. K. நரசிம்மன் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றினார்.  AIBDPA மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி, சிறப்பு அழைப்பாளர் தோழர். S. முத்துகுமாரசாமி, கடலூர் மாவட்டச்செயலர் தோழர். I.M. மதியழகன், புதுவை SNEA மாவட்டச் செயலர் தோழர். ஹரிதாஸ், BSNLEU புதுவை மாவட்டச் செயலர் தோழர். A. சுப்பிரமணியன், மாவட்ட உதவித்தலைவர் தோழர். N. கொளஞ்சியப்பன், TNTCWU மாவட்டச்செயலர் தோழர். B. மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.

            மாவட்டத் தலைவராக தோழர். P. சக்திவேல், மாவட்டச் செயலராக தோழர். V. ராமகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளராக தோழர். M.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏகமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட மாநாட்டின் நிறைவாக தோழர். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

 • AIBDPA புதுச்சேரி 3வது மாவட்ட மாநாடு.

  புதுச்சேரி 3வது மாவட்ட மாநாடு.

  நாள் :

  2017 டிசம்பர் 23, சனிக்கிழமை.

  இடம் :

  புதுச்சேரி BSNLEU சங்க அலுவலகம் .

  தலைமை :

  தோழர். S. ஜெயராமன், மாவட்டத் தலைவர்,

  வரவேற்புரை :

  தோழர். P . சக்திவேல், மாவட்டச் செயலர்,

  துவக்க உரை :

  தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA.

  வாழ்த்துரை :

  தோழர். S. மாணிக்க மூர்த்தி, மாநிலத் தலைவர், AIBDPA.

  தோழர். A. சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU.

  தோழர். N.கொளஞ்சியப்பன், மாவட்ட உதவித் தலைவர், BSNLEU,

  தோழர். B. மகாலிங்கம், மாவட்டச் செயலர், TNTCWU.

  மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள்.