Latest

10/recent/ticker-posts

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் (மெடிக்கல் அதாலத்) இரண்டாவது கூட்டம் 22-08-2023

மெடிக்கல் அதாலத் இரண்டாவது கூட்டம் 22-08-2023

சேலம் (தர்மபுரி), கோயம்புத்தூர் (குன்னூர்), திருநெல்வேலி (தூத்துக்குடி), திருச்சி NODEL Centre ஆகிய மாவட்டங்கள்.

தோழர்களே,
                    BSNL தமிழ் மாநில நிர்வாகம் அறிவித்திருந்த BSNL MRS மெடிக்கல் அதாலத் இரண்டாவது கூட்டம் 22.8.23 அன்று நடைபெற்றது.

             மாநில நிர்வாகத்தின் சார்பில் CGM திரு.C.V. வினோத், Sr.GM.HR, DGM(HR), AGM (Welfare), SDE( Welfare), CAO திரு. சீனிவாச ராகவன் ஆகியோர் மாநில மட்டத்திலும், மாவட்டத்தில் GM மற்றும் கணக்கு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

              சென்னையில் மாநில சங்கத்திலிருந்து மாநிலத் தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். பி. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

               மாவட்டங்களில் கோவையில் தோழர் நிஷார் அகமத் பொறுப்பு மாவட்டச் செயலாளர், என்.பி ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர், தோழர் முரளி கிருஷ்ணன் துணை மாவட்ட செயலாளர் குன்னூர் தோழர் காளிமுத்து கூடலூர் கிளைச் செயலர்

      சேலத்தில் தோழர். எம். மதியழகன் மாவட்டத் தலைவர், தோழர். T. பழனி மாநில உதவி செயலர், தோழர். R. கோபாலன் மாநில அமைப்புச் செயலர், தோழர். D. பாஸ்கரன் தர்மபுரி மாவட்ட செயலாளர்

       திருநெல்வேலியில் தோழர். எஸ். முத்துசாமி மாவட்ட செயலர், தோழியர். V. சீதாலட்சுமி அகில இந்திய துணைப் பொருளாளர், தோழர். சங்கரநாராயணன் மாவட்ட துணைச் செயலாளர், தோழர். பி. ராமர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், தோழர். கே. கணேசன் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    CGM அவர்களுடைய துவக்க உரையுடன் கூட்டம் துவங்கியது. பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை CGM அவர்கள் வலியுறுத்தினார். மெடிக்கல் அலவன்ஸ், இண்டோர் பில்கள், அவுட்டோர் பில், காணாமல் போன மருத்துவ பில்கள், இவை அனைத்தும் முழுமையாக விவாதிக்கப்பட்டு, பிரச்சனைகள் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளன. அதாலத் அறிவிக்கப்பட்ட காரணமாகவே பல பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு இருக்கின்றன.

தோழர்களே,
           இந்த அதாலத் கூட்டம் நமக்கு ஒரு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் மூலம் பிரச்சனைகளை மாவட்ட மட்டங்களில் தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதாலத் கூட்டங்களை ஒரு தொடர் நிகழ்வாக மாற்றுவதற்கு மாநில சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

             அதாலக் கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாநில, மாவட்ட தோழர்கள் அனைவருக்கும், இதனை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் மாநில நிர்வாகத்திற்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர், மாநில செயலாளர்.
23.8.23

Post a Comment

0 Comments