ஓய்வூதியர் மருத்துவ குறைதீர் கூட்டம் (மெடிக்கல் அதாலத்) மூன்றாம் நாள் 23.8.23
August 24, 2023
ஓய்வூதியர்மருத்துவ குறைதீர் கூட்டம் (மெடிக்கல் அதாலத்) மூன்றாம் மற்றும் கடைசி நாள் 23 8 23
தஞ்சை (கும்பகோணம்) கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள்
தோழர்களே !! BSNL தமிழ் மாநில நிர்வாகம் அறிவித்திருந்த பிஎஸ்என்எல் எம் ஆர் எஸ் மெடிக்கல் அதாலத் மூன்றாம் நாள் கூட்டம் 23.8.23ல் நடைபெற்றது.
இதில் மாநில மட்டத்தில் சி.ஜி.எம் அலுவலக அதிகாரிகளும் மாவட்டங்களில் GMகள், நிர்வாக மற்றும் கணக்கு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாநில சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி கலந்து கொண்டனர்.
தஞ்சையில் மாநிலத் துணைத் தலைவர் தோழர். M.குருசாமி, மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். R. பக்கிரிநாதன், தோழர். மணிவண்ணன் மாவட்ட செயலர், தோழர் எஸ் எம் செல்வராஜ் மாவட்ட செயலர் ஆகியோரும்
கடலூரில் தோழர். மதியழகன் மாவட்ட செயலாளர், தோழர் பாண்டுரங்கன் மாவட்ட துணை தலைவர், தோழர் இளங்கோவன் மாவட்ட துணைப் பொருளாளர், தோழர். அண்ணாமலை மாவட்ட துணைச் செயலாளர் ஆகியோரும்
வேலூரில் தோழர். V. ஏழுமலை மாவட்ட செயலாளர், தோழர். C. ஞானசேகர் மாநில துணைச் செயலாளர், தோழர் லோகநாதன் மாநில துணை மாநில அமைப்புச் செயலாளர், தோழர் முருகன் மாவட்ட துணைச் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களில் சி.ஜி.எம் அவர்கள் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதாலத் கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் இதனை சிறப்பாக நடத்திய சி.ஜி.எம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மாவட்டச் செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை கோர்வையாக மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் ராஜசேகர், மாநிலச் செயலாளர். 24.8.23
0 Comments