Latest

10/recent/ticker-posts

AIBDPA மாநில நிர்வாகிகள் - தேங்கி கிடக்கும் ஓய்வூதியர் பிரச்சினைகள் தொடர்பாக - Jt.CCA உடன் சந்திப்பு .

தேங்கி கிடக்கும் ஓய்வூதியர் பிரச்சினைகள் தொடர்பாக Jt.CCA உடன் சந்திப்பு.

தோழர்களே !!
                     நமது மாநில சங்கத்தின் சார்பில்
1) 2023 ஆகஸ்ட் 5 தேதியிட்டு 32 குடும்ப ஓய்வூதியர் பிரச்சினைகளும் ஐந்து Dependent Child பெயர் சேர்க்கை பிரச்சனைகளும் ஆக மொத்தம் 37 பிரச்சனைகளும்,

மேலும்

2) 08-08-2023 தேதியிட்டு Pay fixation & LPD பிரச்சனை தொடர்பாக எட்டு பிரச்சனைகளும் CCA நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்திருந்தோம்.

             இது தொடர்பாக 22.08.2023 அன்று மாநில தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் ஆகியோர் Jt. CCA திருமதி. கௌதமி அவர்களை சந்தித்து விவாதித்தோம். அவர்கள் குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் தொடர்பாக BSNL மாவட்ட நிர்வாகங்களோடு கலந்து பேச இருப்பதாகவும் பிறகு நமக்கு பிரச்சனைகள் சம்பந்தமாக நம்மோடு விவாதிப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

               29.08.2023 அன்று தேதியும் கொடுத்திருந்தார்கள். அந்த அடிப்படையில் நாம் அவர்களோடு தொடர்பு கொண்டு இன்று 30.8.23 அவரை சந்தித்தோம்.

            அவர்கள், அவர்களது பணி இன்னும் முடியவில்லை என்பதால் மேலும் ஒரு வார காலம் கழித்து அனைத்து பிரச்சனைகளுக்கும் Status report தெரிவிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் நம்மிடம் பேசுகின்ற பொழுது தெரிவித்த ஒரு சில விஷயங்கள்.

1) நாம் கொடுத்திருக்கும் பிரச்சனைகளில் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விட்டன.
( ஆனால் நமக்கு தகவல் வரவில்லை.)

2) ஒரு சில பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்களுக்கு கடிதம் சென்று இருக்கிறது. அவர்களிடம் இருந்து நீண்ட காலமாக பதில் இல்லை.

3) ஒரு சிலருக்கு சென்ற கடிதங்கள் திரும்ப வருகின்றன.

4) ஒரு சிலர் தொடர்பான கடிதங்கள் BSNL நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து முறையான பதில் இல்லை.

இவைகளை எல்லாம் சரி செய்தால் தான் CCA அலுவலகத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்பதனையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனினும் நம்மோடு விரைவில் இது சம்பந்தமாக விவாதிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

தோழர்களே !!
      மாநில சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அன்பான வேண்டுகோள்.

     குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் சம்பந்தமாக நாம் சற்று கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. பிரச்சனைகளை வாங்கி அப்படியே கொடுத்து விடுகிறோம். அதை தலமட்டத்தில் நாம் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

       CCA அலுவலகத்திலிருந்து ஏதேனும் ஓய்வூதியர்களுக்கு கடிதம் வந்திருக்கிறதா அல்லது BSNL அலுவலகத்தில் ஏதேனும் கடிதம் பதில் அனுப்பப்படாமல் உள்ளதா என்பதையும் பிரச்சனை வாரியாக நீங்கள் சரி பார்த்து மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

        CCA அலுவலகத்தில் இது தொடர்பான பணிகளை விரைவாக முடிக்க மாநில சங்கம் பொறுப்பு ஏற்கும்.

மேலும், வரும் காலத்தில் CCA அலுவலகத்தில் ஓய்வூதியர் பிரச்சனைகளில் உள்ள காலதாமதத்தை சரி செய்வதற்கு மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

நாம் கொடுத்த கடிதங்கள் உங்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
ஏதேனும் பிரச்சனைகள் விடுபட்டிருந்தால் மாநில சங்கத்திற்கு தெரிவிக்கவும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர். ராஜசேகர்,
மாநிலச் செயலாளர்.
30.8.23

Post a Comment

0 Comments