Latest

10/recent/ticker-posts

BSNL PENSIONERS ஆகஸ்ட் 24/25 தேதிகளில் டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டம்*

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள், பென்ஷன் ரிவிசன் கேட்டு, ஆகஸ்ட் 24/25 தேதிகளில் டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டம்

ஆகஸ்ட் 24,25, டெல்லியில் நமது சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டம், ஓய்வூதியர் தொழிற்சங்க வரலாற்றில் சிவப்பு மையால் எழுதப்பட வேண்டிய முக்கிய நிகழ்வு.


 







             நாட்டின் சீனியர் சிட்டிசன் (மூத்த குடிமக்கள்) எனப்படும் ஓய்வு பெற்றோர் ஒன்று சேர்ந்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு, ஆர்த்தெழுந்த போராட்டம்.

                நமது BSNL, MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 21-25, 5 நாட்கள் தொடர் தர்ணாவிற்கு அழைப்பு விட்டிருந்தது. இது காவல் துறையால் ஒரு நாளுக்கு மட்டும், அதுவும் மதியம் ஒரு மணி வரை என்று மாற்றப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது.

                    ஆகஸ்ட் 24 காலையில் இருந்தே தோழர்கள், நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரவு பகலாகப் பயணம் செய்து, ஜந்தர் மந்தரில் குவியத் தொடங்கினர். நம் சங்கத் தோழர். VAN நம்பூதிரி, தலைமை தாங்க, முதல் நாள் நிகழ்வு தொடங்கியது. கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அவற்றில் தோழர்களின் ஆதங்கம், கோபம் அனைத்தும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது. அரசின் பாராமுகம், DOT நிர்வாகத்தின் பாரபட்சம், கொடுக்க வேண்டிய பென்சன் மாற்றம் தாமதத்தால் வந்த கோபம் பொங்க ஆர்ப்பரித்தனர். நம் பொதுச்செயலர் K. G. ஜெயராஜ் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம், இதற்கு முன்னர் தனியாகப் போராடியது, இப்போது கூட்டமைப்பாகப் போராடுவதன் வலிமை, நம் கோரிக்கைகளின் நியாயங்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். மற்ற கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர்கள் தோழர். சிவ் கோபால் மிஸ்ரா தலைவர் NCCPA தர்ணாவைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை விமர்சித்து, தங்கள் சங்கம் எப்போதும் உடனிருப்போம் என்று உறுதி கூறினார். தோழர். முத்கல் (MREWA) தோழர். தாமஸ் ஜான், தோழர். DD மிஸ்த்ரி, (BDPA-I), தோழர். ஜோகி, SNPWA, H. F. சுதௌரி, தோழர். V K தோமர் போன்றோர் அரசுக் கொள்கைக்கு எதிராக உரையாற்றினார்கள்.

               இரண்டாம் நாள் ஆகஸ்ட் 25க்கு, காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதால், சஞ்சார் பவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காலையில் இருந்து தமிழ்நாடு, கேரளம், குஜராத் போன்ற தூர மாநிலங்களின் தோழர்கள் அங்கு குவியத் தொடங்கியதை, கண்காணித்த காவல் துறையினர், தோழர்கள் மீது மிகுந்த கண்டிப்பு காண்பித்தனர். நின்றிருந்த தோழர்களை, வேன்களில் ஏற்றி, ஜந்தர் மந்தருக்கே கொண்டு சேர்த்தனர். பின்னர் சஞ்சார் பவன் வந்த நமது தலைவர்களுடன் கார சாரமாக விவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக ஜந்தர் மந்தரிலேயே தர்ணா நடத்த அனுமதித்தனர். முதல் நாள் போலவே தலைவர்கள் பலர் உரையாற்றினர். பிறகு தலைவர்களை, காவல் துறையே, சஞ்சார் பவனுக்கு அழைத்துச் சென்றது. DOT நிர்வாகத்திடம் நமது கோரிக்கை மனுவை, (memoranda statement) அளித்த பின்னர், தர்ணா முடிவுக்கு வந்தது. பென்ஷன் ரிவிஷன் கோரிக்கை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                 தர்ணாவில் சிறப்பாக, முதல் நாள் சுமார் 1000 தோழர்களும், இரண்டாம் நாள் 500 தோழர்களும் கலந்து கொண்டனர். நமது தமிழ் மாநிலத்தில் இருந்து 51 பேரும், சென்னை தொலைபேசி சார்பில் 21 பேரும் கலந்து கொண்டனர்.

                தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த தார்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை தோழர்களையும் மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது. பாராட்டுகிறது. இவர்களுக்கு நிதி உதவி அளித்து அனுப்பி வைத்த மாவட்ட, கிளை சங்கங்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஓய்வு பெற்றாலும், எங்கள் போராட்டப்பாதை ஓயாது !

கரம் கோர்த்து, குரல் எழுப்ப, ஒன்றாய் நிற்போம் !!

போராடுவோம் என்று நீரூபித்திருக்கிறோம் !!!

வெற்றி நமதே !!!!

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர், மாநிலச் செயலாளர்.
26.8.23

Post a Comment

0 Comments