AIBDPA தமிழ் மாநிலச் சங்க மையக் கூட்டம் -13.09.2023
September 13, 2023
AIBDPA தமிழ் மாநிலச் சங்க மையக் கூட்டம். 13.09.2023
தோழர்களே, AIBDPA மாநில சங்கத்தின் மையக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக 13.9.23 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர் C.K. நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா, மாநிலத் துணைத் தலைவர் தோழர். பி. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்:-
1) மெடிக்கல் அதாலத்* தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஒரு நல்ல முயற்சி இது, தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மாவட்டங்களில் Nodel officer போடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் மருத்துவத்திற்கு minutesல் முறையான வழிகாட்டுதல்கள் இல்லை. அதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும், Non-empanell ஆஸ்பத்திரிகளில் மருத்துவம் பார்ப்பது சம்பந்தமாகவும் போதிய விளக்கம் தேவைப்படுகிறது. மேலும் அதாலத்தில் 15.9.23 க்குள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை அமலாக்கக் கூடிய வகையில் நமது மாவட்ட சங்கங்கள் நிர்வாகத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
2)பென்ஷன் அதாலத் 20.9.23 அவசரகதியில் அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் அதாலத் இரண்டு நாள் அவகாசத்தில் பிரச்சனைகளை கொடுக்க வேண்டும் என்றும், அதற்கும் ஒரு வரையறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர அறிவிப்பு இது இரண்டாவது முறை. இந்த போக்கிற்கு நாம் நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மேலும் CCA நிர்வாகத்தில் ஓய்வூதியர் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், Life Cerificate பிரச்சனைகள், விடுபட்ட பென்ஷனர்க்கு arrears பெறுவதில் உள்ள காலதாமதம் குறைபாடுகள் குறித்தும், மற்றும் CCA அலுவலக அதிகாரிகளோடு பிரச்சனைகளை விவாதிக்க கால அவகாசம் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை குறித்தும் விளக்கமான கடிதம் எழுதுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3)மத்திய செயற்குழு கூட்டம் 5.9.23ஆன்லைனில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் குறித்து ரிப்போர்ட் செய்யப்பட்டது. அதில் மாநிலச் செயலர் ஆர் ராஜசேகர், நமது மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் மோகன் தாஸ், தோழர் வெங்கட்ராமன், தோழியை சீத்தாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
a) நடந்து முடிந்த டெல்லி தார்ணாதொடர்பாக பரிசீலிக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்கின்ற கருத்தை Joint Forum தலைவர்களோடு விவாதித்து முடிவெடுக்க செயற்குழு CHQ க்கு அதிகாரம் கொடுத்துள்ளது.
b) 1.10.23 உலக முதியோர் தினம் அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் TUI(P&R) ஆசிய பகுதி மாநாட்டில் AIBDPA வுக்கு பத்து சார்பாளர்கள் எனவும் அதில் தமிழகத்தில் இருந்து மாநில செயலர் R.ராஜசேகர் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
C) டிசம்பர் 13 /14 தேதிகளில் சென்னையில் NCCPA அகில இந்திய மாநாட்டைதமிழ் மாநில சங்கமும், சென்னை தொலைபேசியும் மற்ற சங்கங்களோடு இணைந்து நடத்துவது குறித்தும் பேசப்பட்டது. AIBDPA விற்கு 34 சார்பாளர்களில், தமிழகத்திற்கு நான்கு சார்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாடு நெருங்கும் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4) NCCPA அகில இந்திய மாநாட்டிற்கு 14.9.23 அன்று வரவேற்புக்குழுஉருவாக்கப்பட உள்ளது. அதில் நன்கொடையாக தமிழ் மாநில சங்கத்திற்கு 2 லட்சம் ரூபாய் பேசப்பட்டுள்ளது. இந்த நன்கொடையினை நமது மாவட்ட சங்கங்கள் மாநில சங்கம் ஒதுக்கும் கோட்டா அடிப்படையில் வசூலித்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
5) 1.10.23 அன்று உலக முதியோர் தினத்தையும், 21.10.23 அன்று AIBDPA அமைப்பு தினத்தையும் சிறப்பாக நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6) இதற்காக மாவட்ட செயலர்கள் கூட்டத்தை 16ஆம் தேதி காலை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் ராஜசேகர் மாநில செயலர் AIBDPA TN 13.9.23
0 Comments