Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA தமிழ் மாநில - மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் - 16-09-2023

சிறப்பாக நடைபெற்ற AIBDPA தமிழ் மாநில – மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் – 16-09-2023

வணக்கம் தோழர்களே!
                                நமது AIBDPA தமிழ்மாநில சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 16-09-2023 அன்று Google meet மூலமாக நடைபெற்றது.

                  கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் தோழர். பி. மாணிக்கமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர் அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு, விவாதிக்க உள்ள பிரச்சினைகளைகள் மற்றும் மையக் கூட்ட முடிவுகள், மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் குறித்தும் விரிவாக பேசினார். கூட்டத்தில் 15 மாவட்ட செயலாளர்களும் சில மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

         தலைவர் தோழர் சி.கே.நரசிம்மன் மற்றும் இதர மூன்று மாவட்ட செயலாளர்களும் சரியாக இணைப்பு கிடைக்காததால் கலந்து கொள்ள இயலவில்லை.

அக்கூட்டத்தில் விரிவாக விவாதித்து ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம்.

A) 2023 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் NCCPA அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
அதற்காக தோழர். சி. கே. நரசிம்மன் மாநில தலைவர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வரவேற்புக் குழு கூட்ட முடிவின் அடிப்படையில் NCCPA அகில இந்திய மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைத்து உதவிகளையும் மாநில சங்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

               அதன் அடிப்படையில் அகில இந்திய மாநாட்டுக்கான நமது AIBDPA அகில இந்திய அளவில் 34 சார்பாளர்களும் தமிழ் மாநில சங்கம் சார்பாக 04 (நான்கு) சார்பாளர்கள் உட்பட கலந்து கொள்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் கலந்து கொள்ளும் சார்பாளர்கள் யார் யார் என்ற விபரம் பின்னர் இறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கான செலவு நிதியாக நமது மாநில சங்கத்தின் சார்பில் 2 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனை கீழ் கண்ட அடிப்படையில் மாவட்டங்கள் மாவட்டங்களில் வசூல் செய்து அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டங்கள் வாரியா வசூல் செய்ய வேண்டிய நன்கொடை விபரம் :-

1)கோவை = ரூபாய் 25000\=.
2) ஈரோடு = ரூபாய் 25000/=
3) வேலூர் = ரூபாய் 25000/=
4) சேலம் = ரூபாய் 20000/=
5) மதுரை = ரூபாய் 20000/=
6) தூத்துக்குடி = ரூபாய் 15000/=
7) திருநெல்வேலி = ரூபாய் 15000/=
8) விருதுநகர் = ரூபாய் 15000/=
9) நாகர்கோவில் = ரூபாய் 15000/=
10) திருச்சி = ரூபாய் 10000/=
11) கடலூர் = ரூபாய் 10000/=
12) பாண்டிச்சேரி = ரூபாய் 10000/=
13) தர்மபுரி = ரூபாய் 10000/=
14) நீலகிரி = ரூபாய் 10000/=
15) சென்னை = ரூபாய் 5000/=
16) கும்பகோணம் = ரூபாய் 5000/=
17) காரைக்குடி = ரூபாய் 2500/=
18) தஞ்சாவூர் = ரூபாய் 2500/=.

மேற்கண்ட தொகையினை மாவட்ட சங்கங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் வசூல் செய்து முடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

B) அக்டோபர் 01 : உலக முதியோர் தினத்தை மாவட்டங்களில் இதர அமைப்புகளோடு இணந்து சிறப்பாக கொண்டாடுவது, முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

C) 21-10-2023 : அன்று நமது AIBDPA சங்கத்தின் அமைப்பு தினத்தை மிகவும் எழுச்சியோடும் சிறப்பான ஏற்பாடுகளோடும் தலமட்டங்களில் கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக மாநில செயலாளரின் தொகுப்புரையில் கீழ்க்கண்ட செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்.

1) 5-9-2023 அன்று ஆன்லைன் மூலமாக AIBDPAவின் மத்திய சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து மத்தியச் சங்க நிர்வாகிகளும் மாநிலச் செயலரும் கலந்து கொண்டனர்.

அதன் முடிவுகள்.
a) நடந்து முடிந்த *24/ 25 8 23 டெல்லி தார்ணா சிறப்பாக நடைபெற்றது*. கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, தொடர்ந்து கூட்டு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மற்ற சங்கங்களோடு விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

b) அக்டோபர் 1 திருவனந்தபுரத்தில் நடைபெறும் TUI(P&R) ஆசிய மண்டல மாநாட்டில் AIBDPA சார்பாக 10 சார்பாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தமிழகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் R.ராஜசேகர் கலந்து கொள்வார் என்றும் தீர்மானிக்கப்பட்டது

2) உழைக்கும் வர்க்கம் அலுவலக சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அலுவலகத்தை சீரமைப்பு செய்ய ஏற்படும் செலவில் பாதியான ரூபாய் 50,000/=ஐ நமது சங்கத்தின் சார்பில் கொடுக்க வேண்டும். மீதி பாதியை AIPRPA சங்கம் ரூபாய் 50000/=ஐ வழங்கும்.

   அலுவலக (கட்டிட) பராமரிப்புச் செலவாக மாதா மாதம் AIBDPA மற்றும் AIPRPA மாநில சங்கங்கள் ரூபாய் 1500/=ஐ வாடகையாக வழங்க வேண்டும்.

       உழைக்கும் வர்க்க அலுவலகத்தில் உள்ள ஹால் மற்றும் ரூம் இரண்டையும் சமமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

3) நடத்தப்பட வேண்டிய *கிளை மாநாடுகளை* திட்டமிட்டு நடத்தி முடிக்க வேண்டும்.

4) *மாவட்டம் தோறும் பெண்கள் கிளைகள்* உருவாக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

5) *மாவட்ட மட்டங்களில் பயிலரங்குகள்* நடத்துவதற்கு உடனடியாக திட்டமிட வேண்டும்

6) *மெடிக்கல் அதாலத்* என்பது நமது சங்கத்தின் முயற்சியால் நடைபெற்ற கூட்டம். அதனை பயன்படுத்தி தீர்க்கப்படாமல் உள்ள மெடிக்கல் சம்பந்தமான பிரச்சினைகளை தலமட்டங்களில் தொடர்ந்து தலையிட்டு தீர்வு காண மாவட்ட சங்கங்கள் முயற்சிகளை செய்ய வேண்டும்.

7) *சென்னை கூட்டுறவு சொசைட்டி தொடர்பாக வழக்கை* தூரிதப்படுத்த நடவடிக்கைகளை மாநில சங்கம் செய்து வருகிறது. அதற்காக தீர்மானிக்கப்பட்ட நன்கொடை தொகை வசூல் செய்து மாநில சங்கத்திலும் விரைவில் ஒப்படைக்க வேண்டும்.

கூட்டத்தின் இறுதியாக மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

Google meet மூலமாக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர். பி. ராமர் அவர்களுக்கு சிறப்பான பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தோழர்களே !
           எடுக்கப்பட்ட சிறப்பான முடிவுகளை சரியாக நிறைவேற்றுவோம் !! முன்னேறுவோம் !!!

தோழமையுடன்,
ஆர்.ராஜசேகர் ,
மாநில செயலாளர்
AIBDPA.
18-09-2023.

Post a Comment

0 Comments