Latest

10/recent/ticker-posts

ஓய்வூதியத் திருத்தம், நீதிமன்ற வழக்கு மற்றும் குரல் கிளிப்புகள் - பொதுச்செயலரின் அறிக்கை

ஓய்வூதியத் திருத்தம், நீதிமன்ற வழக்கு மற்றும் குரல் கிளிப்புகள் - பொதுச்செயலரின் அறிக்கை !!

அன்புள்ள தோழர்களே !!

            1-1-2017 முதல் BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றத்தை அனுமதித்து CAT பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட சில சங்கங்களின் தலைவர்களால் குரல் கிளிப்புகள் பரப்பப்படுகின்றன. அவர்கள் கூற்றுப்படி, நீதிமன்ற தீர்ப்பு நகல் இன்னும் வராததால், விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஊதிய மாற்றத்ததோடு இணைக்காமல் (delink செய்து) ஓய்வூதிய மாற்றத்தை வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்று ஒரு விஷயம் சொல்கிறார்கள்.

     ஓய்வூதிய மாற்றத்தைப் பொருத்தவரையில், ஊதிய மாற்றத்துடன் இணைக்காமல் ( delink) செய்து வழங்கப்படும் என்பது 17-10-2022ம் தேதி DOTயுடனான கூட்டத்தில் பங்கேற்ற (வழக்கு போட்ட சங்கங்கள் உட்பட) 17 ஓய்வூதியர் சங்கங்களுக்கும் DOT நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டதே. இது DOTஆல் ஏற்கனவே 2022ல் முடிவு செய்யப்பட்ட விசயம். இது ஒன்றும் புதிய முடிவல்ல.

       ஃபிட்மென்ட் எவ்வளவு சதவீதம் வழங்கப்படும் என்பதில் தான் பிரச்னை.. 3rd PRC பரிந்துரைத்தபடி 15% ஃபிட்மென்ட் வழங்கப்பட வேண்டும் என்று AIBDPA மற்றும் சில ஓய்வூதியர் சங்கங்கள் கடுமையாகக் கோரியுள்ளன. அதற்கான நியாயங்கள், உண்மைகள், புள்ளி விவரங்கள், விதிகள் போன்றவற்றை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய மாற்றம் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் முடிந்துவிட்டதாக DoT கூறியுள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த விவகாரத்தில் DOTயின் எந்த முடிவும் தாமதமாகிவிட்டதா ? என்பது தெரியவில்லை.

           17-10-2022 அன்று ஓய்வூதியர் சங்கங்களுடனான DOTன் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, இதே தலைவர்களால் குரல் கிளிப்புகள் பரவலாக பரப்பப்பட்டன. அவர்கள் கோரிக்கை வைத்தபடி 7th CPC அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் வழங்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டதாகவும், விரைவில் அதற்கான உத்தரவுகள் வெளியிடப்படவுள்ளன என்றும் குரல் கிளிப்புகள் மூலம் செய்தி பரப்பினர். ஆனால் 17-10-2022 அன்று நடந்த கூட்டத்தில், 3rd PRC இன் அடிப்படையிலேயே தான் ஓய்வூதிய மாற்றம் குறித்து மட்டுமே DOT நிர்வாக அதிகாரிகள் சிந்திக்கிறார்கள் என்று DOT நிர்வாகம் தெளிவாகக் கூறியது. இதனால் இந்த தலைவர்கள் தவறான, ஆதாரமற்ற செய்திகளை பரப்பியதற்காக தங்கள் சொந்த உறுப்பினர்களால் கூட கேலி செய்யப்பட்டனர். அதுவும் மற்ற சங்கங்களை பொய்யாக குற்றம் சாட்டி அதற்கான நன்மதிப்பைப் பெற தாங்கள் முயற்சித்ததை விரும்பவில்லை.

    ஓய்வூதிய மாற்றம் வழங்குவதில் தாமதத்தை எதிர்த்தும் ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல் (delink செய்து) 1-1-2017 முதல் 3rd PRCன்படி 15% பிட்மெண்டுடன் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற வலுவான, நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி AIBDPA சங்கம் மற்றும், மற்ற 7 BSNL & MTNL ஓய்வூதியர் அமைப்புகளுடன் (JF) இணைந்தும், NCCPA மூலமாகவும், மூன்று முறை நாடாளுமன்றம் / சஞ்சார் பவன் முன்பு அணிவகுப்புகளை ஏற்பாடு செய்து, பிரதமர், தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் DOT செயலரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தது.

       ஆகஸ்ட் 25, 2023 அன்று சஞ்சார் பவன் அணிவகுப்பின் ஒரு பகுதியாக சஞ்சார் பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நமது தோழர்கள் பலர் அப்பகுதியில் தடை உத்தரவுகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரில் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் அணிவகுத்து தர்ணா நடத்தியது நிச்சயமாக DOT மற்றும் அரசாங்கத்தின் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.

     எப்படியிருந்தாலும், தீர்ப்பின் நகலுக்கு காத்திருப்போம். சாதகமான தீர்ப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்

           இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யலாம் என்று அவர்களே கருதுவதால், மனுதாரர் சங்கங்கள் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.     வழக்கம் போல் அரசாங்கத்தின் எந்த மேல்முறையீடும் விஷயங்களை மேலும் தாமதப்படுத்தலாம்.

      தற்போதைய CAT வழக்கின் காரணமாக அரசாங்கமும் DOTயும் ஓய்வூதிய மாற்றத்தை தாமதப்படுத்துகின்றனவா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அரசாங்கத்தின் எந்த மேல்முறையீடும் நிச்சயமாக அரசாங்கத்தின் முடிவை மேலும் தாமதப்படுத்தலாம்.

🤔 காத்திருப்போம் !! 😀😀

தோழமை வாழ்த்துக்களுடன்

K.G.ஜெயராஜ் பொதுச்செயலர்

Post a Comment

0 Comments