எழுச்சியுடன் நடைபெற்ற திருச்சி மாவட்ட விரிவடைந்த செயற்குழு
27.9.23
தோழர்களே அனைவருக்கும் வணக்கம்!!!!
AIBDPA திருச்சி மாவட்டச்சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் ஒரு மாவட்ட மாநாடு போன்று சிறப்பாக 27/09/2023 அன்று காலை 10.00 மணி அளவில் திருச்சி PGM அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் ஏழு பெண் தோழர்கள் மற்றும் 85க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு தோழர். I. ஜான் பாஷா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர். A. சண்முகம் கிழக்கு கிளை செயலாளர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர். D. ருக்குமாந்தன் மேற்கு கிளை செயலாளர் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
தமிழ் மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜ சேகர் ஒரு விரிவான சிறப்புரை நிகழ்த்தினார். பேசும்போது செப்டம்பர் 5 ரயில்வே ஊழியர்கள் தியாகிகள் தினத்தன்று மாவட்ட சங்கத்தின் சார்பில் தியாகிகளுக்கு பொன்மலை சங்கத்திடலில் அஞ்சலி செலுத்தியதற்கு மாநில சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் நாம் நடத்தி இருக்கும் போராட்டங்கள், பென்ஷன் ரிவிசன், தற்போது வந்துள்ள PB CAT தீர்ப்பு, அது சம்பந்தமான நமது சங்கத்தின் பார்வை, மெடிக்கல் பிரச்சினைகள், குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் அனைத்தையும் விரிவாக பேசினார்.
தோழர். K. சின்னையன் மாவட்ட செயலாளர் சென்ற செயற்குழுக்கும் இன்று நடைபெற்ற செயற்குழுஹிற்கும் இடைப்பட்ட காலத்தின் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.
மாவட்ட பொருளாளர் தோழர். L. அன்பழகன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். மூத்த தோழர். P. கிருஷ்ணன் மாவட்ட துணை தலைவர் வாழ்த்துரை வழங்கினார். தோழர். G. சுந்தர்ராஜ் BSNLEU மாவட்ட செயலாளர் மற்றும் தோழர். T. தேவராஜ் மாநில அமைப்பு செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
1) தோழர். D. ருக்மாந்தன் மேற்கு கிளை செயலாளர்,
2) தோழர். A. சண்முகம் கிழக்கு கிளை செயலாளர்,
3) தோழர். A. இளங்கோவன்வடக்குகிளை செயலாளர்
4) தோழர் T.மனோகரன் கரூர் கிளை செயலாளர்,
5)தோழர் M.அருணகிரி நாதன் துறையூர் கிளை செயலாளர்,
6) தோழர். P. ஆறுமுகம் புதுக்கோட்டை கிளை செயலாளர்,
7)தோழர். பன்னீர் குளித்தலை கிளை செயலாளர் ஆகியோர் கிளைகளில் உள்ள பிரச்சனை பற்றி பேசினார்கள்.
மாவட்ட செயற்குழுவில் டெல்லி தார்ணாவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டு* தெரிவிக்கப்பட்டது. மேலும் கிளை கூட்டங்கள் நடத்துவதற்கும், கிளை மாநாடுகள் நடத்துவதற்கும், பெண்கள் கிளை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 உலக முதியோர் தினத்தை* சிறப்பாக கொண்டாடுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
NCCPA அகில இந்திய மாநாட்டுக்கு நன்கொடை வசூலித்துக் கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments