சிறப்புமிகு மாநாடாக வேலூர் கிளை மாநாடு
வேலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் உள்ள வேலூர் கிளையின் கிளைமாநாடு 07-09-2023 அன்று கிளைத் தலைவர் தோழர். வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். G.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார் .
கிளைக் கூட்டத்தை துவக்கி வைத்து மாவட்டச் செயலர் தோழர். V. ஏழுமலை துவக்க உரையாற்றினார். தமிழ் மாநில உதவிச் செயலாளரும் வேலூர் மாவட்டத் தலைவருமான தோழர். சி. ஞானசேகரன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தோழர். P. முருகன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர்.சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் தோழர்கள் சற்குணம், தோழர். முனிவேல், தோழர். சாமிநாதன் DR Rtd, தோழர் K. J. விநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
25.08.2023 அன்று டெல்லிப் பேரணியில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் நமது கிளையில் புதியதாக உறுப்பினராகச் சேர்ந்த தோழர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
புதியதாக ஒரு மகளிர் கிளை துவக்குவது எனவும், 01.01.2017 முதல் செய்ய வேண்டிய ஓய்வூதிய மாற்றம் உடனடியாக தரப்பட வேண்டுமெனவும், வேலூரில் CGHS வசதி உருவாக்க வேண்டுமெனவும்,
மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் பில் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக தோழர் சண்முகம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. சிறப்பாக கிளை மாநாடு நடைபெற ஏற்பாடு செய்த தோழர்கள் கலந்து கொண்ட தோழர்களுக்கும் மாவட்ட மாநிலச் சங்கஙகளின் வாழ்த்துக்கள், பாராட்டுகள்.
இவண்
G. கிருஷ்ணமூர்த்தி
கிளைச் செயலாளர்
வேலூர்.
0 Comments