Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்.

சிறப்பாக நடைபெற்றஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்.

    






     9.9.23 இன்று காலை ஈரோடு டெலிபோன் பவனில் வைத்து AIBDPA மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். மாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர். முகமது ரபிக் ADS அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

      தமிழ் மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் நடைபெற்ற போராட்டங்கள், பென்சன் ரிவிசனின் தற்போதைய நிலை, மெடிக்கல் அதாலத் உள்ளிட்ட விபரங்களைப் பற்றி விரிவாக பேசினார்.

       மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி நடைபெற்ற போராட்டங்கள், மெடிக்கல் அதாலத், மாவட்ட அளவிலான பிரச்சனைகள் பற்றி பேசினார். கிளைகள் மற்றும் மாவட்ட மாநாடுகள் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் பவானி, கொடுமுடி தவிர மற்ற கிளை மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட மாநாடு டிசம்பர் மாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

       மாவட்ட மாநாட்டு நன்கொடையாக ரூ. 200/- உறுப்பினர்களிடம் வாங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சொசைட்டி வழக்கு நிதியாக சொசைட்டி உறுப்பினர்களிடம் ரூ 500 வசூல் செய்து மாநில சங்கத்திற்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது .

          மாநில சங்க நிர்வாகிகள் தோழர். N. குப்புசாமி மற்றும் தோழர். L. பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர். சொங்கப்பன் டெல்லி பேரணி பற்றி பேசினார். தோழர் ராஜமாணிக்கம் DVP மாவட்ட அளவிலான பிரச்சினைகள் குறித்து பேசினார்.
செயற்குழு கூட்டத்தில் 13 கிளை செயலாளர்கள் 10 மாவட்டச் சங்க நிர்வாகிகள், 5 சிறப்பு அழைப்பாளர்கள் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 48 தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயற்குழுவில் நன்கொடை அளித்த தோழர்கள் ஆலிஸ் தமிழ் செல்வராணி, மீனாட்சி மற்றும் தோழர் லோகநாதன் ஆகியோருக்கு நன்றி. இறுதியில் மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் ட. பழனிசாமி நன்றி கூறினார்.

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

சின்னசாமி மாவட்ட செயலாளர் ஈரோடு.

Post a Comment

0 Comments